கர்நாடகத்தில் கொரோனாவுக்கு 18 குழந்தைகள் பெற்றோரை இழந்து உள்ளனர்


கர்நாடகத்தில் கொரோனாவுக்கு 18 குழந்தைகள் பெற்றோரை இழந்து உள்ளனர்
x
தினத்தந்தி 3 Jun 2021 9:18 PM IST (Updated: 3 Jun 2021 9:18 PM IST)
t-max-icont-min-icon

கர்நாடகத்தில் கொரோனா 2-வது அலையில் ஏராளமானவர்கள் தங்களது உயிரை இழந்துள்ளனர்.

பெங்களூரு, 

குறிப்பாக பல்வேறு குழந்தைகள் தங்களது பெற்றோரை இழந்து அனாதையாகி உள்ளனர். இதையடுத்து, கர்நாடக அரசு சார்பில் மாநிலத்தில் கொரோனாவுக்கு பெற்றோரை இழந்த குழந்தைகளின் தகவல்கள் திரட்டும் பணி நடந்துள்ளது. அதில், மாநிலம் முழுவதும் 18 குழந்தைகளின் பெற்றோரை கொரோனாவுக்கு உயிர் இழந்திருப்பது தெரியவந்தது.

பாகல்கோட்டை, ராய்ச்சூரில் தலா 3 பேர், பெங்களூரு, மைசூரு, பெலகாவி, பீதர் தலா 2 பேர், கோலார், சாம்ராஜ்நகர், தாவணகெரே, மண்டியாவில் தலா ஒரு குழந்தையும் கொரோனாவுக்கு தந்தை, தாயை இழந்து அனாதையாகி உள்ளனர்.

அவர்கள் தற்போது அரசு குழந்தைகள் நல காப்பகத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. அதே நேரத்தில் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி கொரோனாவால் தந்தை அல்லது தாய் இருவரில் ஒருவரை பறி கொடுத்த குழந்தைகளின் தகவல்களை சேகரிக்கும் பணியிலும் அரசு ஈடுபட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Next Story