தடுப்பூசி போடுவதற்கு குவிந்த மக்கள்
கம்பம் அருகே தடுப்பூசி போடுவதற்கு மக்கள் குவிந்தனர்.
கம்பம்:
கம்பம் அருகே நாராயணத்தேவன்பட்டி ஊராட்சி உள்ளது. இங்கு 9 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து நாராயணத்தேவன்பட்டியில் கொரோனா தடுப்பு பணிகளை தீவிரப்படுத்த கலெக்டர் கிருஷ்ணனுண்ணி உத்தரவு பிறப்பித்தார்.
அதன்பேரில் முக்கிய வீதிகள் தடுப்புகள் அமைக்கப்பட்டு மூடப்பட்டுள்ளது.
மேலும் ஊராட்சி நிர்வாகம் சார்பில், வீடுகள்தோறும் மருந்து பெட்டகம் வழங்கப்பட்டு காய்ச்சல் பரிசோதனை மற்றும் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டன.
இதனையடுத்து 2-வது கட்டமாக தடுப்பூசி முகாம் நடந்தது. 18 வயதுக்கு மேற்பட்ட ஆண், பெண்களுக்கு தடுப்பூசி போடப்பட்டன. தடுப்பூசி போடுவதற்காக கிராம மக்கள் ஏராளமானோர் குவிந்தனர். குறிப்பாக ஆண்களை விட பெண்கள் அதிகளவில் கலந்து கொண்டு தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.
இந்த முகாமில் டாக்டர் அரவிந்த், காமயகவுண்டன்பட்டி ஆரம்ப சுகாதார நிலைய சித்தா டாக்டர் சிராஜ்தீன், ஊராட்சி மன்ற தலைவர் பொன்னுத்தாய் செல்லையா, ஊராட்சி செயலர் ஈஸ்வரன் மற்றும் மருத்துவ குழுவினர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story