மருதூர் அணைக்கட்டிலிருந்து கார் சாகுபடிக்கு மருதூர் கால்வாய்களில் தண்ணீர் திறப்பு


மருதூர் அணைக்கட்டிலிருந்து  கார் சாகுபடிக்கு மருதூர் கால்வாய்களில் தண்ணீர் திறப்பு
x
தினத்தந்தி 3 Jun 2021 10:04 PM IST (Updated: 3 Jun 2021 10:04 PM IST)
t-max-icont-min-icon

மருதூர் அணைக்கட்டிலிருந்து கார் சாகுபடிக்கு மருதூர் கீழக்கால், மேலக்காலில் இருந்து நேற்று தண்ணீர் திறக்கப்பட்டது. இதன் மூலம் 20 ஆயிரம் ஏக்கர் பாசன வசதி பெறும் என அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்தார

ஸ்ரீவைகுண்டம்:
மருதூர் அணைக்கட்டிலிருந்து கார் சாகுபடிக்கு மருதூர் கீழக்கால், மேலக்காலில் இருந்து நேற்று தண்ணீர் திறக்கப்பட்டது. இதன் மூலம் 20 ஆயிரம் ஏக்கர் பாசன வசதி பெறும் என அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
தண்ணீர் திறப்பு
ஸ்ரீவைகுண்டம் மருதூர் அணைக்கட்டிலிருந்து கார் சாகுபடிக்கு தண்ணீர் திறப்பு நிகழ்ச்சி நேற்று நடந்தது. மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், எம்.எல்.ஏ.க்கள் ஊர்வசி அமிர்தராஜ், சண்முகையா ஆகியோர் முன்னிலையில், அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அணைக்கட்டிலிருந்து கீழக்கால், மேலக்காலில் தண்ணீரை திறந்து வைத்தார்.
பின்னர் அமைச்சர் கூறியதாவது:- 
20 ஆயிரம் ஏக்கர் பாசன வசதி
மருதூர் அணைக்கட்டிலிருந்து கார் சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 20 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும். விவசாயிகளை காக்கும் அரசாக தி.மு.க. அரசு செயல்பட்டு வருகிறது. தாமிரபரணி நதி முழுமையாக சீரமைக்க நீர்வளத்துறை அமைச்சரிடம் பேசப்பட்டுள்ளது.
இதற்கு உரிய நடவடிக்கை விரைவில் எடுக்கப்படும். விரைவில் அனைத்து நீர்வழிப் பாதைகளும் சீரமைக்கப்படும். மருதூர் அணைக்கட்டு பகுதியில் சுற்றுலா தலம் அமைக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
கலந்து கொண்டவர்கள்
நிகழ்ச்சியில் தாசில்தார் கோபாலகிருஷ்ணன், துணை தாசில்தார் சங்கரநாராயணன், இளநிலை பொறியாளர் ரகுநாத், மாநில மாணவரணி துணை செயலாளர் உமரிசங்கர், கருங்குளம் ஒன்றிய ெசயலாளர் இசக்கி பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story