சாலை போடுவதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு


சாலை போடுவதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு
x
தினத்தந்தி 3 Jun 2021 10:51 PM IST (Updated: 3 Jun 2021 10:51 PM IST)
t-max-icont-min-icon

திருப்பூர் 29-வது வார்டில் சாக்கடை கால்வாய்-குடிநீர் குழாய் பதிப்பு பணி முடிக்காமல் சாலை போடுவதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஸ்மார்ட் சிட்டி மேற்பார்வையாளரிடம் முன்னாள் கவுன்சிலர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

அனுப்பர்பாளையம்
திருப்பூர் 29-வது வார்டில் சாக்கடை கால்வாய்-குடிநீர் குழாய் பதிப்பு பணி முடிக்காமல் சாலை போடுவதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஸ்மார்ட் சிட்டி மேற்பார்வையாளரிடம் முன்னாள் கவுன்சிலர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சாலை அமைக்கும் பணி 
திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பாதாள சாக்கடை, சாக்கடை கால்வாய், குடிநீர் குழாய் பதிப்பு, சாலை அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது. இதன்படி அனைத்து பணிகளும் நிறைவடைந்த பின்னர் கடைசியாக சாலை அமைக்கும் பணி நடைபெறுவது வழக்கம்.
 இந்த நிலையில் திருப்பூர் மாநகராட்சி 29-வது வார்டுக்குட்பட்ட சக்தி தியேட்டர் ரோட்டில் லக்கி நகர் பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பணிகள் நிறைவடைந்து சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. ஆனால் அங்கு ஒரு பகுதியில் மட்டும் சாக்கடை கால்வாய் மற்றும் குடிநீர் பதிப்பு பணி மேற்கொள்ளப்படாமல் நிலுவையில் உள்ளது.
இதுபற்றி தகவல் அறிந்ததும் அ.தி.மு.க. முன்னாள் கவுன்சிலர் கனகராஜ் தலைமையில் பொதுமக்கள் அங்கு திரண்டனர். பின்னர் நிலுவையில் உள்ள சாக்கடை கால்வாய் மற்றும் குடிநீர் பதிப்பு பணிகளை முடித்த பின்னரே சாலை அமைக்கும் பணியை முடிக்க வேண்டும் என்று என்று ஸ்மார்ட் சிட்டி மேற்பார்வையாளரிடம் கூறினார்கள். 
வாக்குவாதம்
ஆனால் அவர் எங்களுக்கு கொடுத்த பணிகள் பட்டியலில் அந்த 2 பணிகளும் இல்லை என்றும், சாலை அமைக்கும் பணி முடிந்த பின்னர் நிலுவையில் உள்ள பணிகளை செய்து கொடுப்பதாக தெரிவித்தார். ஆனால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கவுன்சிலர் கனகராஜ் மற்றும் பொதுமக்கள் மேற்பார்வையாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து சாலை அமைக்கும் பணி சிறிது நேரம் நிறுத்தப்பட்டது. 
பின்னர் ஸ்மார்ட் சிட்டி மேற்பார்வையாளர் சாக்கடை கால்வாய் மற்றும் குடிநீர் குழாய் பதிப்பு பணி முடியும் வரை சாலை அமைக்கும் பணி நடைபெறாது என்று உறுதி அளித்தார். இதன் பின்னரே பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
---


Next Story