வீடு வீடாக காய்ச்சல் பரிசோதனை செய்யும் பணிகள் மாநகராட்சி ஆணையாளர் நேரில் ஆய்வு


வீடு வீடாக காய்ச்சல் பரிசோதனை செய்யும் பணிகள் மாநகராட்சி ஆணையாளர் நேரில் ஆய்வு
x
தினத்தந்தி 3 Jun 2021 10:55 PM IST (Updated: 3 Jun 2021 10:55 PM IST)
t-max-icont-min-icon

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக வீடுவீடாக காய்ச்சல் பரிசோதனை செய்யும் பணிகளை மாநகராட்சி ஆணையாளர் நேரில் ஆய்வு செய்தார்.

கோவை

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக வீடுவீடாக காய்ச்சல் பரிசோதனை செய்யும் பணிகளை மாநகராட்சி ஆணையாளர் நேரில் ஆய்வு செய்தார். 

கிருமி நாசினி தெளிப்பு

கோவையில் கொரோனா தொற்று பாதிப்பு சற்று குறைந்து கட்டுக்குள் வந்துள்ளது. ஆனாலும் பலி எண்ணிக்கை குறையவில்லை. 

இதை தடுக்க மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கை களை மேற்கொண்டு வருகிறது.

அதன்படி கோவை மாநகராட்சி தெற்கு மண்டலம் முத்துசாமி காலனி, தில்லை நகர், சரோஜினி நகர், சிவாஜி நகர், பேரூர் மெயின் ரோடு, அண்ணா ரோடு, பிருந்தாவன்‌ நகர் ஆகிய பகுதிகளில் தூய்மை பணியாளர்கள் டிராக்டர் மூலம் கிருமி நாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். 

காய்ச்சல் பரிசோதனை 

மேலும் சுகாதார பணியாளர்கள் மூலம் வீடு வீடாக சளி, காய்ச்சல், இருமல் மற்றும் உடல் ஆக்சிஜன் அளவு கண்டறிதல், உடல் வெப்ப நிலை கண்டறிதல் ஆகிய பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

மேற்கு மண்டலத்துக்கு உட்பட்ட பகுதிகளில் உடல் நலக் குறைவால் அவதிப்படும் பொதுமக்கள் குறித்த கணக்கெடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை பணிகள் நடைபெறுகின்றன. 

மேலும் ராமலிங்கம் காலனி மாநகராட்சி உயர்நிலைப் பள்ளி, எஸ்.ஆர்.பி. அம்மணியம் மாள் பள்ளிகளில் கொேரானா தடுப்பூசி போடும் பணிகளும் நடந்து வருகிறது. 

ஆணையாளர் ஆய்வு

இந்த நிலையில் கோவை ராமநாதபுரத்தில் உள்ள மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் பொதுமக்களுக்கு தடுப்பூசி போடப்படும் பணிகளை ஆணையாளர் குமாரவேல் பாண்டியன் நேரில் ஆய்வு செய்தார். 

பின்னர் 57 -வது வார்டு கஸ்தூரி காந்திநகர் பகுதியில் இரு சக்கர வாகன பழுது பார்க்கும் கடை முன் கூட்டமாக இருந்த நபர்களிடம், கடையை பூட்ட சொல்லி சமூக இடைவெளியை கடைபிடிக்குமாறு அறிவுறுத்தினார்.

அப்போது அந்த பகுதியில் இருந்த கொரோனா  சிறப்பு கார் ஆம்புலன்ஸ் டிரைவரிடம் தினமும் எந்தெந்த பகுதிகளுக்கு செல்கிறீர்கள்? எத்தனை நபர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கிறீர்கள்? என்று விவரம் கேட்டார். 

அத்துடன் வீடு வீடாக நடந்து வரும் காய்ச்சல் பரிசோதனையையும் அவர் நேரில் பார்வையிட்டார். 

நர்ஸ்களுக்கு அறிவுறுத்தல் 

பின்னர் கோவை மாநகராட்சி அலுவலகத்தில் கொரோனா தடுப்பு பணிக்காக தற்காலிக நர்ஸ் பணியிடத்துக்கான நேர்காணலுக்கு வந்திருந்தவர்களிடம் களப்பணியில் பாதுகாப்புடன் நடந்து கொள்ள வேண்டுமென்று அறிவுறுத்தினார். 

இந்த ஆய்வின்போது செயற் பொறியாளர் ரவிச்சந்திரன், மண்டல சுகாதார அலுவலர்கள் பலர் இருந்தனர்.


Next Story