முழு ஊரடங்கால் பருத்தி சாகுபடியில் பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்த முடியாமல் விவசாயிகள் தவிப்பு
முழு ஊரடங்கால் பருத்தி சாகுபடியில் பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்த முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர். எனவே பூச்சிமருந்துகள், இடுபொருட்கள் தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடு்க்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவாரூர்,
நாடு முழுவதும் கொரோனா நோய் தொற்றின் 2-ம் அலை தீவிரமாக பரவி வருகிறது. மேலும் தமிழகத்திலும் கொரோனா வைரசின் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது. இதன் காரணமாக கடந்த மாதம் 24-ந்தேதி முதல் தளர்வில்லாத முழு ஊரடங்கு தமிழக அரசு சார்பில் அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி பால், உணவு, மருந்தகங்கள், மருத்துவமனைகள் தவிர அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு, பொது போக்குவரத்தும் நிறுத்தப்பட்டுள்ளது.
முழு ஊரடங்கால் வேளாண் சார்ந்த தொழில்களுக்கு விலக்கு அளிக்கப்படுவதாக தமிழக அரசு சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்தநிலையில் திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூர், குடவாசல், வலங்கைமான், மன்னார்குடி, வடபாதிமங்கலம், நன்னிலம், பேரளம், பூந்தோட்டம், கொல்லுமாங்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 18 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் நடப்பாண்டில் பருத்தி சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.
சப்பாத்தி பூச்சி தாக்குதல்
தற்போது பருத்தி செடிகளில் பூச்சி தாக்குதல் அதிகம் நிலவி வருகிறது. இதனால் பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்த பூச்சி மருந்து தெளிக்க வேண்டியது அவசியம். ஆனால் பூச்சி மருந்து கடைகள் பெரும்பாலும் பூட்டியே உள்ளன. அரசின் அறிவுறுத்தலின்படி காலை 6 மணி முதல் 9 மணி வரை திறக்கப்படுகிறது. இதனால் பருத்தியில் பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்த பூச்சி மருந்து அடிக்க முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர்.
இதுகுறித்து விவசாயி ஒருவர் கூறுகையில்,
கொரோனா நோய் தொற்று காரணமாக இந்த ஆண்டு பருத்தி சாகுபடி குறைந்துள்ளது. தற்போது பருத்தி செடிகளில் பூக்கள் பூத்து காய்கள் வைக்க தொடங்கியுள்ளன. சில பகுதிகளில் பருத்தி அறுவடை செய்ய தயார் நிலையில் உள்ளன. இந்த நிலையில் பருத்தி செடிகளில் அதிக பாதிப்பை ஏற்படுத்தும் சப்பாத்தி பூச்சி தாக்குதல் தற்போது அதிகரித்துள்ளது. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
தடையின்றி பூச்சிமருந்துகள்
தமிழக அரசு சார்பில் வேளாண் சார்ந்த தொழில்களுக்கு ஊரடங்கு காலகட்டத்தில் விலக்கு அளிக்கப்பட்டு இருந்தாலும், பருத்தி செடிகளில் பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்தும் பூச்சி மருந்துகள் வாங்க தனியார் கடைகளை நாட வேண்டிய அவசியம் உள்ளது. இந்த நிலையில் பெரும்பாலான பூச்சி மருந்து கடைகள் மூடப்பட்டுள்ளன. ஒரு சில கடைகள் திறக்கப்பட்டு இருந்தாலும் அவைகளும் காலை 6 மணி முதல் 9 மணி வரை மட்டுமே செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே தமிழக அரசு பருத்தி சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு தடையின்றி அனைத்து பூச்சி மருந்துகளும், இடுபொருட்களும் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Related Tags :
Next Story