கோவையில் இன்று 2,980 பேருக்கு கொரோனா - மாவட்ட வாரியாக பாதிப்பு விவரம்


Image courtesy : AFP
x
Image courtesy : AFP

தமிழகத்தில் இன்று 24 ஆயிரத்து 405 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னை,

தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு விவரங்களை மாநில சுகாதாரத்துறை வெளியிட்டது. அதன்படி, தமிழகத்தில் இன்று 24 ஆயிரத்து 405 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், மாநிலத்தில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 21 லட்சத்து 72 ஆயிரத்து 751 ஆக அதிகரித்துள்ளது.

வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் 2 லட்சத்து 80 ஆயிரத்து 426 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிப்பில் இருந்து இன்று ஒரேநாளில் 32 ஆயிரத்து 221 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால், தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 18 லட்சத்து 66 ஆயிரத்து 660 ஆக அதிகரித்துள்ளது.

ஆனாலும், கொரோனா தாக்குதலுக்கு தமிழகத்தில் இன்று ஒரேநாளில் 460 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், மாநிலத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 25 ஆயிரத்து 665 ஆக அதிகரித்துள்ளது.

மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு இன்றைய விவரம்:-

அரியலூர் - 264
செங்கல்பட்டு - 983
சென்னை - 2,062
கோவை - 2,980
கடலூர் - 569
தர்மபுரி - 307
திண்டுக்கல் - 325
ஈரோடு - 1,671
கள்ளக்குறிச்சி - 324
காஞ்சிபுரம் - 492
கன்னியாகுமரி - 739
கரூர் - 326
கிருஷ்ணகிரி - 411
மதுரை - 519
நாகை - 613
நாமக்கல் - 801
நீலகிரி - 584
பெரம்பலூர் - 228
புதுக்கோட்டை - 311
ராமநாதபுரம் - 237
ராணிப்பேட்டை - 318
சேலம் - 1253
சிவகங்கை - 160
தென்காசி - 306
தஞ்சாவூர் - 1020
தேனி - 481
திருப்பத்தூர் - 327
திருவள்ளூர் - 695
திருவண்ணாமலை - 437
திருவாரூர் - 620
தூத்துக்குடி - 344
திருநெல்வேலி - 289
திருப்பூர் - 1,264
திருச்சி - 823
வேலூர் - 297
விழுப்புரம் - 577
விருதுநகர் - 448

மொத்தம் - 24,405

Next Story