ராமேசுவரம்-திருச்சி இடையே மீண்டும் பயணிகள் ரெயில் இயக்கம்


ராமேசுவரம்-திருச்சி இடையே மீண்டும் பயணிகள் ரெயில் இயக்கம்
x
தினத்தந்தி 3 Jun 2021 11:57 PM IST (Updated: 3 Jun 2021 11:57 PM IST)
t-max-icont-min-icon

ராமேசுவரம்-திருச்சி இடையே மீண்டும் பயணிகள் ரெயில் இயக்கம்

ராேமசுவரம்
தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் அதிகம் உள்ளதால் பெரும்பாலான ெரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதுபோல் கொரோனா பரவல் காரணமாக ரெயில் களில் கூட்டம் இல்லாத காரணத்தால் ராமேசுவரத்தில் இருந்து தினமும் திருச்சிக்கு இயக்கப்பட்டு வந்த பயணிகள் ெரயில் மற்றும் சேது எக்ஸ்பிரஸ்ரெயிலும் கடந்த சில வாரங்களாக ரத்து செய்யப்பட்டிருந்தது. 
இந்த நிலையில் கடந்த 1-ந் தேதி முதல் ராமேசுவரத்தில் இருந்து திருச்சிக்கு மீண்டும் பயணிகள் ரெயில்  போக்குவரத்து தொடங்கியுள்ளது.
அதே நேரத்தில் தினமும் மாலை 5 மணி அளவில் ராமேசுவரத்தில் இருந்து சென்னைக்கு புறப்பட்டு செல்லும் விரைவு ரெயிலானது வருகின்ற 15-ந் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. வழக்கம்போல் 8.15 மணிக்கு சென்னைக்கு புறப்பட்டு செல்லும் சேது எக்ஸ்பிரஸ் ெரயில் வழக்கம் போல் இயக்கப்படுவதாக கூறப்படுகின்றது. 
கடந்த 1-ந் தேதி முதல் ராமேசுவரம்-திருச்சி இடையே மீண்டும் பயணிகள் ெரயில் போக்குவரத்து தொடங்கப்பட்டு இருந்தாலும் கடந்த 3 நாட்களாகவே அனைத்து பெட்டிகளிலும் காலியாக இருப்பதுடன் மிக குறைவான பயணிகள் மட்டுமே தான் சென்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story