நாமக்கல் மாவட்டத்தில் ஒரே நாளில் 801 பேருக்கு கொரோனா
ஒரே நாளில் 801 பேருக்கு கொரோனா
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் மேலும் 801 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளதால், இதுவரை இம்மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 34,816 ஆக அதிகரித்து உள்ளது.
801 பேருக்கு கொரோனா
தமிழக சுகாதாரத்துறை அறிவிப்பின்படி நேற்று முன்தினம் வரை நாமக்கல் மாவட்டத்தில் 34 ஆயிரத்து 5 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இந்த நிலையில் பிற மாவட்டங்களில் சிகிச்சை பெற்று வந்த 10 பேரின் பெயர் நாமக்கல் மாவட்ட பட்டியலுடன் இணைக்கப்பட்டது. இதனால் நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 34,015 ஆகஅதிகரித்தது.
இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் மேலும் 801 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது. இதனால் நாமக்கல் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 34,816 ஆக அதிகரித்து உள்ளது.
7,512 பேருக்கு சிகிச்சை
இந்த நிலையில் நேற்று நாமக்கல் மாவட்டத்தில் 740 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பினர். நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை 27 ஆயிரத்து 23 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பி உள்ளனர். 281 பேர் இறந்து விட்ட நிலையில், 7,512 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், பொதுமக்கள் முழு ஊரடங்கு மற்றும் அரசின் வழிகாட்டுதல்களை முழுமையாக கடைபிடிக்க வேண்டும் என சுகாதாரத்துறையினர் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.
Related Tags :
Next Story