தடுப்பூசி முகாம்களில் சமூக இடைவெளியை பின்பற்றாததால் கொரோனா பரவும் அபாயம்
தடுப்பூசி முகாம்களில் சமூக இடைவெளியை பின்பற்றாததால் கொரோனா பரவும் அபாயம் உள்ளது.
தளவாய்புரம்,ஜூன்.
கொரோனாவை வெல்லும் பேராயுதமாக தடுப்பூசி விளங்குகிறது. இதனால் மக்களிடையே தடுப்பூசி போட்டுக் கொள்வதில் ஆர்வம் ஏற்பட்டுள்ளது. ஆனால் பல்வேறு இடங்களில் தடுப்பூசி போட வருவோர் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் இருப்பதை காண முடிகிறது. இதனால் கொரோனா பரவும் அபாயம் உள்ளது.
செட்டியார்பட்டி பேரூராட்சி அலுவலகத்தில் நேற்று காலை நடந்த தடுப்பூசி முகாமில் 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இங்கு தடுப்பூசி போட வந்தவர்கள் டோக்கன் வாங்குவதிலும், தடுப்பூசி போடுவதிலும் தான் கவனம் செலுத்தினர். அங்கு சமூக இடைவெளி இல்லாமல் இருந்தது.
எனவே கொரோனா பரவலை தடுக்க இம்மாவட்டத்தில் நடைபெறும் தடுப்பூசி முகாம்களில் சமூக இடைவெளி பின்பற்றப்பட சுகாதார துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகும்.
Related Tags :
Next Story