சுங்கச்சாவடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
சுங்கச்சாவடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்
விராலிமலை
விராலிமலை தாலுகாவிற்கு உட்பட்ட இராசநாயக்கன்பட்டியில் சுங்கச்சாவடி உள்ளது. இங்கு, 50-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் 3 ஷிப்டுகளாக பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் சுங்கச்சாவடி ஊழியர்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு சுங்கச்சாவடி பணியாளர்கள் சங்க மாநில துணை பொதுச் செயலாளர் மணி தலைமை தாங்கினார். ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும். தொற்று கண்டறியப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கொரோனா நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் சிகிச்சை காலத்தில் அவர்களது குடும்பத்திற்கு நிதி உதவி வழங்க வேண்டும். கொரோனாவால் பலியாக நேரிட்டால் தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு ரூ.25 லட்சம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஊழியர்கள் பலர் கலந்து கொண்டு கோரிக்கைகள் குறித்து கோஷங்கள் எழுப்பினர்.

Related Tags :
Next Story