பழனி ரெயில்நிலையத்தில் போலீசார் தீவிர சோதனை


பழனி ரெயில்நிலையத்தில் போலீசார் தீவிர சோதனை
x
தினத்தந்தி 4 Jun 2021 1:50 AM IST (Updated: 4 Jun 2021 1:50 AM IST)
t-max-icont-min-icon

வெளிமாநிலங்களில் இருந்து மதுபான கடத்தலை தடுக்க பழனி ரெயில் நிலையத்தில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

பழனி: 

கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு அமலில் உள்ளது. மதுக்கடைகள் மூடப்பட்டதால் மதுப்பிரியர்கள் சாராயம் காய்ச்சுவதை தடுக்கவும், சட்டவிரோத மது விற்பனையை தடுக்கவும் போலீசார் சார்பில் தனிப்படை அமைக்கப்பட்டு ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மைசூரில் இருந்து திண்டுக்கல்லுக்கு வந்த ரெயிலில் மதுபாட்டில்களை கடத்தி வந்தவர்களை ரெயில்வே போலீசார் கைது செய்தனர். 

இதையடுத்து அனைத்து ரெயில் நிலையங்களிலும் தற்போது போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி கேரள மாநிலம் பாலக்காட்டில் இருந்து பழனிக்கு வந்த ரெயிலில் போலீசார் நேற்று சோதனை செய்தனர். 

மேலும் முக கவசம் அணிவதன் அவசியம் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். 


இதுபற்றி பழனி ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மகேஸ்வரன் கூறுகையில், கேரளாவிலும் ஊரடங்கு அமலில் உள்ளதால் அங்கிருந்து மதுபான கடத்தல் நடக்க வாய்ப்புள்ளது. 



எனவே பழனி வழியே செல்லும் பாலக்காடு எக்ஸ்பிரஸ் ரெயிலில் தீவிர சோதனை செய்து வருகிறோம் என்றார்.


Next Story