சிறுமியை திருமணம் செய்த வாலிபர் உள்பட 5 பேர் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு
சிறுமியை திருமணம் செய்த வாலிபர் உள்பட 5 பேர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
வள்ளியூர்:
நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே இடையன்குடியைச் சேர்ந்தவர் அருமைதாஸ். இவருடைய மகன் ராஜேஷ் (வயது 22). இவருக்கும், 16 வயது சிறுமிக்கும் கடந்த 23-6-2020 அன்று திருமணம் நடந்தது. இந்த நிலையில் கர்ப்பம் அடைந்த சிறுமியை மருத்துவ பரிசோதனைக்காக திசையன்விளை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அப்போது சிறுமியின் வயதில் சந்தேகம் அடைந்த டாக்டர், இதுகுறித்து ராதாபுரம் சமூக நல விரிவாக்க அலுவலர் சுசீலாவுக்கு தகவல் தெரிவித்தார்.
இதுதொடர்பாக சமூக நல விரிவாக்க அலுவலர் அளித்த புகாரின் பேரில், வள்ளியூர் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாரதி பிரியா விசாரணை நடத்தினார். விசாரணையில், சிறுமியின் வயதை மறைத்து திருமணம் செய்தது தெரியவந்தது. இதையடுத்து சிறுமியை திருமணம் செய்த ராஜேஷ் மற்றும் அவருடைய பெற்றோர், சிறுமியின் பெற்றோர் ஆகிய 5 பேர் மீது போக்சோ சட்டத்திலும், குழந்தை திருமண தடுப்பு பிரிவு சட்டத்திலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story