கடலில் தவறி விழுந்து சிறுமி பலி


கடலில் தவறி விழுந்து சிறுமி பலி
x
தினத்தந்தி 4 Jun 2021 2:16 AM IST (Updated: 4 Jun 2021 2:16 AM IST)
t-max-icont-min-icon

விளையாடிக் கொண்டிருந்த போது கடலில் தவறி விழுந்து சிறுமி பலியானாள்

கோட்டைப்பட்டினம்
புதுக்கோட்டை மாவட்டம், ஜெகதாப்பட்டினம் பகுதியை சேர்ந்தவர் முருகானந்தம். இவர் சொந்த ஊர் நாகை மாவட்டம் வானகிரி ஆகும். இவர் ஜெகதாப்பட்டினம் பகுதியில் குடும்பத்துடன் தங்கியிருந்து மீன்பிடி தொழில் செய்து வருகிறார். இவருடைய மனைவி சுதா. இவர்களுடைய மகள் கமலி (வயது 5).இந்நிலையில் நேற்று மாலை ஜெகதாப்பட்டினம் மீன்பிடி தளத்தில் சிறுமி கமலி விளையாடிக் கொண்டிருந்தாள். அப்போது எதிர்பாராதவிதமாக கமலி கடலில் தவறி விழுந்து விட்டதாக கூறப்படுகிறது. உடனே அருகில் இருந்தவர்கள் ஓடிச் சென்று சிறுமியை மீட்டு மணமேல்குடியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.  அங்கு குழந்தையை பரிசோதனை செய்த மருத்துவர்கள் சிறுமி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து கடலோர காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story