செலவு கணக்கை சமர்ப்பிக்காத 7 வேட்பாளர்கள்
திண்டுக்கல் மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட 7 வேட்பாளர்கள் செலவு கணக்கை தாக்கல் செய்யாமல் உள்ளனர்.
திண்டுக்கல்:
தமிழக சட்டமன்ற தேர்தல் கடந்த ஏப்ரல் 6-ந்தேதி நடைபெற்றது. இதில் போட்டியிட்ட வேட்பாளர்கள் அனைவரும் தங்களுடைய தேர்தல் செலவு கணக்குகளை உரிய ஆவணங்களுடன், தேர்தல் அதிகாரிகளிடம் சமர்ப்பிக்க வேண்டும்.
இதற்காக தேர்தல் நேரத்தில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமிக்கப்பட்டு இருந்தனர். இதனால் ஒரு சில வேட்பாளர்கள் உடனுக்குடன் செலவு கணக்குகளை சமர்ப்பித்தனர்.
ஆனால், பெரும்பாலான வேட்பாளர்கள் தேர்தல் முடிந்த பின்னரும் செலவு கணக்குகளை சமர்ப்பிக்கவில்லை.
திண்டுக்கல் மாவட்டத்தை பொறுத்தவரை 7 தொகுதிகளிலும் மொத்தம் 132 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இவர்கள் ஆன்லைன் தேர்தல் செலவு கணக்கை சமர்ப்பிக்க வசதியாக, கலெக்டர் அலுவலகத்தில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
இதனால் வேட்பாளர்கள் ஆர்வமுடன் வந்து தேர்தல் செலவு கணக்கை சமர்ப்பித்தனர்.
ஒருசிலர் தாமாக ஆன்லைனில் கணக்கை சமர்ப்பித்தனர். ஆனால், 7 பேர் செலவு கணக்குகளை சமர்ப்பிக்கவில்லை.
இதையடுத்து அவர்களுக்கு இந்த மாதம் (ஜூன்) இறுதி வரை அவகாசம் வழங்கப்பட்டு இருக்கிறது.
Related Tags :
Next Story