ஒரே கிராமத்தில் 29 பேருக்கு கொரோனா


ஒரே கிராமத்தில் 29 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 4 Jun 2021 4:18 AM IST (Updated: 4 Jun 2021 4:18 AM IST)
t-max-icont-min-icon

பாவூர்சத்திரம் அருகே உள்ள ஒரு கிராமத்தில் 29 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.

பாவூர்சத்திரம்:
பாவூர்சத்திரம் அருகே பெத்தநாடார்பட்டி பஞ்சாயத்து பொட்டலூரில் சில தினங்களுக்கு முன்பு கேரளாவில் இருந்து வந்த நபர் ஒருவர் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தார். இவரது அடக்கத்தில் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அங்கு மருத்துவ துறை சார்பில் பொதுமக்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 29 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.

இதைத்தொடர்ந்து கீழப்பாவூர் யூனியன் ஆணையாளர்கள் பார்த்தசாரதி, திலகராஜ், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் இசக்கியப்பா மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் அங்கு சென்று பார்வையிட்டனர். பின்னர் பெத்தநாடார்பட்டி பஞ்சாயத்து மூலம் ஊரில் உள்ள அனைத்து தெருக்களும் கம்பு கட்டி மூடப்பட்டது, மேலும் அனைத்து தெருக்களிலும் பிளீச்சிங் பவுடர் தூவி, கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. தொடர்ந்து அந்த பகுதியில் கொரோனா பரிசோதனை நடைபெற்று வருகிறது.

Next Story