அய்யன்கொல்லி அருகே காட்டுயானைகள் அட்டகாசம்


அய்யன்கொல்லி அருகே காட்டுயானைகள் அட்டகாசம்
x
தினத்தந்தி 4 Jun 2021 6:05 AM IST (Updated: 4 Jun 2021 6:13 AM IST)
t-max-icont-min-icon

பந்தலூர் தாலுகாவிற்கு உட்பட்ட அய்யன்கொல்லி அருகே காட்டுயானைகள் அட்டகாசம் செய்து வருகின்றன.

பந்தலூர்,

பந்தலூர் தாலுகாவிற்கு உட்பட்ட அய்யன்கொல்லி அருகே சாமியார் மலைப்பகுதி உள்ளது. இங்கு 20-க்கும் மேற்பட்ட காட்டுயானைகள் முகாமிட்டு உள்ளன. இந்த காட்டுயானைகள் இரவு நேரங்களில் அருகில் உளள் அய்யன்கொல்லி, மூலக்கடை, குழிக்கடவு, தட்டாம்பாறை, கோட்டப்பாடி, கருத்தாடு, மழவன்சேரம்பாடி, குறிஞ்சிநகர், புஞ்சைக்கொல்லி, கொளப்பள்ளி டேன்டீ உள்ளிட்ட பகுதிகளில் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன. 

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் அய்யன்கொல்லி, குழிக்கடவு, தட்டாம்பாறை ஆகிய பகுதிகளுக்குள் 9 காட்டுயானைகளும், மூலக்கடை பகுதிக்குள் 4 காட்டுயானைகளும் புகுந்தன. தொடர்ந்து பேபி, மேத்யூ, பைலி, ஜார்ஜ், வர்க்கீஸ் ஆகியோரது விளைநிலங்களில் வாழை, தென்னை, பாக்கு, காபி உள்ளிட்ட விவசாய பயிர்களை சேதப்படுத்தின. 

மேலும் பலா மரங்களில் விளைந்த பலாப்பழங்களை ருசித்தன. மேலும் தோட்டங்களில் அமைக்கப்பட்டு இருந்த மின்வேலிகளை சேதப்படுத்தின. தொடர்ந்து பொதுமக்களின் குடியிருப்புகளை முற்றுகையிட்டன. இதுகுறித்து தகவல் அறிந்த பிதிர்காடு, சேரம்பாடி வனத்துறையினர் நேரில் சென்று காட்டுயானைகளை விரட்டியடித்தனர். 


Next Story