விஜயவாடாவில் இருந்து விமானத்தில் மருத்துவ உபகரணங்கள் சென்னை வந்தன


விஜயவாடாவில் இருந்து விமானத்தில் மருத்துவ உபகரணங்கள் சென்னை வந்தன
x
தினத்தந்தி 4 Jun 2021 10:22 AM IST (Updated: 4 Jun 2021 10:22 AM IST)
t-max-icont-min-icon

விஜயவாடாவில் இருந்து விமானத்தில் வென்டிலேட்டா்கள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் சென்னை பழைய விமான நிலையத்துக்கு வந்தது.

ஆலந்தூர்,

தமிழகத்தில் கொரோனா 2-வது அலையை கட்டுப்படுத்த தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க தேவையான ஆக்சிஜன் செறிவூட்டிகள், வென்டிலேட்டா் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களை வெளிநாடுகளில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் பெருமளவு வரவழைக்கப்படுகிறது.

இந்தநிலையில் ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் இருந்து இந்திய விமானப்படை தனி விமானத்தில் 56 ஆக்சிஜன் செறிவூட்டிகள், 60 வென்டிலேட்டா்கள், 25 டிராலியுடன் இணைக்கப்பட்ட வென்டிலேட்டா்கள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் சென்னை பழைய விமான நிலையத்துக்கு வந்தது. மருத்துவ உபகரணங்கள் அடங்கிய பாா்சல்களை தமிழக அரசு அதிகாரிகளிடம் ஒப்படைத்தனா். பின்னர் அவைகளை சென்னை ஓமந்தூராா் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனா்.

அதேபோல் ஜொ்மனியில் இருந்து சென்னை வந்த சரக்கு விமானத்தில் 4 ஆக்சிஜன் செறிவூட்டிகளை சுங்க இலாகா அதிகாரிகள் முன்னுரிமை அளித்து உடனடியாக டெலிவரி கொடுத்து அனுப்பினா்.

Next Story