கொரோனா ஊரடங்கு திருநங்கைகளுக்கு நலத்திட்ட உதவி - அப்சரா ரெட்டி வழங்கினார்
கொரோனா ஊரடங்கு திருநங்கைகளுக்கு நலத்திட்ட உதவிகளை அ.தி.மு.க. செய்தி தொடர்பாளரான அப்சரா ரெட்டி வழங்கினார்.
சென்னை,
கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள திருநங்கைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி சென்னையை அடுத்த கண்ணகிநகரில் நடைபெற்றது. அ.தி.மு.க. செய்தி தொடர்பாளரான அப்சரா ரெட்டி, மகளிர் முன்னேற்ற அமைப்பு, ஜெயின் அன்னபூர்ணா அறக்கட்டளை ஆகியவற்றுடன் இணைந்து 100 திருநங்கைகளுக்கு அரிசி, மளிகை பொருட்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அதேபோன்று, அதே பகுதியைச் சேர்ந்த 400 குடும்பத்தினருக்கு உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டது.
மேலும், சென்னை அமைந்தகரையில் உள்ள சிறுவர்கள் இல்லத்துக்கு சென்ற அப்சரா ரெட்டி அங்குள்ள குழந்தைகளுக்கு முககவசம் உள்ளிட்ட கொரோனா தடுப்பு உபகரணங்களை வழங்கினார்.
Related Tags :
Next Story