மழையூர்புதூரில் மின்னல் தாக்கி பசுமாடு பலி, 2 தென்னை மரங்கள் தீப்பிடித்து எரிந்தன
மழையூர்புதூரில் மின்னல் தாக்கி பசுமாடு பலி
சேத்துப்பட்டு
திருவண்ணாமலை மாவட்டம் தேசூர் அருகில் உள்ள மழையூர் புதூர் கிராமத்தில் நேற்று முன்தினம் மாலை 5 மணியளவில் திடீரென இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இந்த மழை சுமார் 45 நிமிடம் இடைவிடாமல் நீடித்தது.
அந்தக் கிராமத்தைச் சேர்ந்த மோகன் என்ற விவசாயி மேய்ச்சலுக்காக அங்குள்ள ஒரு நிலத்தில் கட்டிப்போட்டிருந்த பசுமாடு மின்னல் தாக்கி துடி துடித்து இறந்தது.
மேலும் அதே பகுதியில் இருந்த 2 தென்னை மரங்களை மின்னல் தாக்கியதால், அவை தீப்பிடித்து எரிந்து கருகின. மோகனின் நிலத்தில் உள்ள பம்பு செட்டு மீதும் மின்னல் தாக்கியதில் மின் மோட்டார் சேதமடைந்தது.
Related Tags :
Next Story