திருப்பத்தூர் மாவட்டத்தில் 3 லட்சம் குடும்ப அட்டைகளுக்கு 14 வகையான மளிகை பொருட்கள் . இன்று முதல் வழங்கப்படுகிறது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் 3 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்குப இன்று (சனிக்கிழமை) முதல் 14 வகையான மளிகை பொருட்கள் வழங்கப்படுகிறது.
திருப்பத்தூர்
14 வகையான மளிகை பொருட்கள்
திருப்பத்தூர் மாவட்டத்தில் 3 லட்சத்து 10 ஆயிரம் குடும்ப அட்டைகளுக்கு 14 வகையான மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்பட உள்ளது. இதையொட்டி திருப்பத்தூர் மாவட்டத்தில் வீடு வீடாகச் சென்று ரேஷன் கடை ஊழியர்கள் டோக்கன் வழங்கினர். அனைவருக்கும் டோக்கன் வழங்கும் பணிகள் முடிவடைந்தது.
கொரோனா பரவலை தடுக்கும் வகையில் கூட்ட நெரிசலை தவிர்க்க ஒரு நாளைக்கு 200 பேருக்கு பொருட்கள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட வழங்கல் அலுவலர் விஜயன் கூறியதாவது:-
இன்று முதல் வழங்கப்படுகிறது
திருப்பத்தூர் மாவட்டத்தில் 514 ரேஷன் கடைகள் மூலம் 3 லட்சத்து 11 ஆயிரத்து 385 அரிசி கார்டுதாரர்களுக்கு 14 வகையான மளிகை பொருட்கள் வழங்கப்பட உள்ளது. இதற்காக அரிசி ரேஷன் கார்டுதாரர்களுக்கு நேரடியாக வீடுகளுக்குச் சென்று டோக்கன் வினியோகிக்கும் பணி முடிவடைந்தது.
இன்று (சனிக்கிழமை) முதல் ரேஷன் கடைகளில் தினமும் 200 பேருக்கு பொருட்கள் வழங்கப்பட்ட உள்ளது. ரேஷன் கடைகளில் அத்தியாவசியப் பொருட்கள் வினியோகம் முறையாக நடைபெறுகிறதா என்பதை கண்காணிக்க அனைத்து தாலுகாக்களுக்கும் மாவட்ட அளவிலான அதிகாரிகள் கண்காணிப்பு அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளார்கள் என கூறினார்.
Related Tags :
Next Story