வாணியம்பாடி அருகே காய் கறிகளுக்குள் மறைத்து கடத்திய ரேஷன் அரிசி பறிமுதல்


வாணியம்பாடி அருகே காய் கறிகளுக்குள் மறைத்து கடத்திய ரேஷன் அரிசி பறிமுதல்
x
தினத்தந்தி 4 Jun 2021 7:15 PM IST (Updated: 4 Jun 2021 7:15 PM IST)
t-max-icont-min-icon

காய் கறிகளுக்குள் மறைத்து கடத்திய ரேஷன் அரிசி பறிமுதல்

வாணியம்பாடி

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த செட்டியப்பனூர் சோதனைச்சாவடியில் வாணியம்பாடி தாலுகா போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சென்னையில் இருந்து ஆந்திர மாநிலம் குப்பம் நோக்கி சென்ற மினி வேன் ஒன்றை நிறுத்தினர். உடனே டிரைவர் மினி வேனை அங்கேயே நிறுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார். மினிவேனை சோதனை செய்ததில் அத்தியாவசிய பொருட்களான காய்கறிகளை கொண்டு செல்வது போல் காய்கறி கூடைகளை அடுக்கி, அதற்கு அடியில் 1 டன் ரேஷன் அரிசி கடத்திச் செல்வது கண்டுபிடிக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து ஒரு டன் அரிசியை, மினி வேனுடன் பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து அங்குள்ள கண்காணிப்பு கேமரா காட்சி பதிவுகளை கொண்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story