இந்தியாவின் அழகற்ற மொழி என கன்னட மொழிக்கு அவமதிப்பு செய்த கூகுள் கண்டனங்கள் எழுந்ததை தொடர்ந்து இணைய பக்கத்தை நீக்கியது
இந்தியாவின் அழகற்ற மொழி என கன்னட மொழிக்கு கூகுள் நிறுவனம் அவமதிப்பு செய்துள்ளது. இதற்கு கண்டனம் எழுந்ததை தொடர்ந்து அந்த இணைய பக்கத்தை கூகுள் நிறுவனம் நீக்கியது.
பெங்களூரு,
உலகின் மிக முக்கிய தேடல் தளமாக கூகுள் உள்ளது. நமக்கு தெரியாத விஷயங்களுக்கும், கேள்விகளுக்கு கூகுளில் தேடினால் பதில் கிடைக்கும். உலக அளவில் கூகுள் பயன்பாடு அதிகமாக உள்ளது. இந்த நிலையில் இந்தியாவின் அழகற்ற மொழி எது என்ற கேள்விக்கு, கூகுள் அளித்த பதில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
அதாவது, இந்தியாவின் அழகற்ற மொழி எது என்ற கேள்விக்கு, கூகுள் நிறுவனம் கன்னட மொழி என்று பதில் அளித்தது. இதனை பார்த்து கன்னட அமைப்பினர், கர்நாடக அரசியல் கட்சி தலைவர்கள், பல்வேறு தரப்பினரும் கூகுள் நிறுவனத்துக்கு எதிராக ஆக்ரோஷம் அடைந்தனர்.
மேலும் அவர்கள் கூகுள் நிறுவனத்துக்கு கண்டனம் தெரிவித்தனர். முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி, கூகுள் நிறுவனத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்தார். அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், கன்னடம் மட்டுமின்றி, எந்த மொழியும் அழகற்றது அல்ல. அனைத்து மொழிகளும் அழகானதே. மொழி விஷயத்தில் கூகுள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். கன்னட மொழி விஷயத்தில் 2 மடங்கு எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
மொழி விஷயத்தில் கடும் கண்டனங்கள் மற்றும் சர்ச்சை எழுந்த நிலையில், அந்த இணைய பக்கத்தையே கூகுள் நீக்கி உள்ளது.
Related Tags :
Next Story