கொரோனா தடுப்பூசி போட ஆண்களே அதிக ஆர்வம்


கொரோனா தடுப்பூசி போட ஆண்களே அதிக ஆர்வம்
x
தினத்தந்தி 4 Jun 2021 8:50 PM IST (Updated: 4 Jun 2021 8:50 PM IST)
t-max-icont-min-icon

திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி போட ஆண்களே அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள். பெண்களை விட ஆண்களே அதிகளவு தடுப்பூசி செலுத்தியுள்ளனர்.

திருப்பூர்
திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி போட ஆண்களே அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள். பெண்களை விட ஆண்களே அதிகளவு தடுப்பூசி செலுத்தியுள்ளனர்.
கொரோனா தடுப்பூசி
திருப்பூர் மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதம் 16-ந் தேதியில் இருந்து தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்ததால் தடுப்பூசி போட வருகிறவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது. இதன் காரணமாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தடுப்பூசி பற்றாக்குறையை எடுத்துக்கூறி, அதிகளவு வரவழைத்தனர். தொடர்ந்து தடுப்பூசியும் செலுத்தப்பட்டு வருகிறது.
திருப்பூர் மாவட்டத்தில் 9 அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்கள், பொது இடங்களில் முகாம் என பல்வேறு பிரிவுகளாக தினமும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் திருப்பூர் மாவட்டத்தில் இதுவரை தடுப்பூசி செலுத்தியவர்களில் ஆண்களே அதிகமாக இருக்கிறார்கள். தடுப்பூசி செலுத்த ஆண்களே அதிக ஆர்வமும் காட்டி வருகிறார்கள். பெண்கள் ஆண்களை விட குறைவான அளவே தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர்.
ஆண்களே அதிக ஆர்வம்
இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-
திருப்பூர் மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதம் 16-ந் தேதியில் இருந்து நேற்று வரை மொத்தமாக 2 லட்சத்து 62 ஆயிரத்து 846 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதிலும் முதல் டோஸ் 2 லட்சத்து 18 ஆயிரத்து 919 பேருக்கும், 2-வது டோஸ் 43 ஆயிரத்து 927 பேருக்கும் செலுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று மட்டும் 9 ஆயிரத்து 325 பேருக்கு மாவட்டம் முழுவதும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 
ஒட்டுமொத்தமாக கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்களில் 1 லட்சத்து 25 ஆயிரத்து 826 ஆண்களுக்கும், 93 ஆயிரத்து 59 பெண்களுக்கும் அடங்குவர். ஆண்கள் தான் அதிகளவில் தடுப்பூசி செலுத்தியுள்ளனர்.
இதுபோல் 2 லட்சத்து 24 ஆயிரத்து 676 பேர் கோவிஷீல்டும், 38 ஆயிரத்து 170 பேர் கோவேக்சினும் செலுத்தியுள்ளனர். இதில் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் 53 ஆயிரத்து 753 பேரும், 18 வயது முதல் 44 வயதுடையவர்கள் 85 ஆயிரத்து 616 பேரும், 45 வயது முதல் 60 வயது வரை உள்ளவர்கள் 79 ஆயிரத்து 498 பேரும் தடுப்பூசி செலுத்தியுள்ளனர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story