கோவில்பட்டியில் ஊரடங்கை மீறி சுற்றித்திரிந்த 200 பேருக்கு கொரோனா பரிசோதனை
கோவில்பட்டியில் ஊரடங்கை மீறி சுற்றித்திரிந்த 200 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
கோவில்பட்டி, ஜூன்:
கோவில்பட்டியில் ஊரடங்கை மீறி வாகனங்களில் சுற்றித் திரிந்த 200 பேருக்கு நேற்று கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.
தடுப்பு நடவடிக்கை
கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த தமிழகத்தில் தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு அமலில் உள்ளது. ஆனாலும் கோவில்பட்டியில் ஊரடங்கை மீறி ஏராளமானோர் வாகனங்களில் தேவையின்றி சுற்றுவதாக அதிகாரிகளுக்கு சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவித்தனர்.
அதன் அடிப்படையில் கோவில்பட்டி சுகாதார பணிகள் துணை இயக்குனர் டாக்டர் அனிதா, நகரசபை ஆணையாளர் ராஜாராம், துணை போலீஸ் சூப்பிரண்டு கலைக் கதிரவன் ஆகியோர் அறிவுறுத்தலின் பேரில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தினசரி நகரின் முக்கிய பகுதிகளில் வாகன சோதனை நடத்தப்பட்டு காரணமின்றி வெளியே வந்தவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.
200 பேருக்கு பரிசோதனை
நேற்று கோவில்பட்டி மெயின் ரோடு, மார்க்கெட் ரோடு சந்திப்பில் டாக்டர் மனோஜ் தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள் சுரேஷ், காஜா மற்றும் போலீசார், செவிலியர்கள், களப்பணியாளர்கள் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டனர்.
அப்போது ஊரடங்கை மீறி வாகனங்களில் தேவையின்றி சுற்றி திரிந்த 200 பேரை பிடித்து கொரோனா பரிசோதனை நடத்தினர்.
Related Tags :
Next Story