புதுக்கோட்டை மாவட்டத்தில் பரவலாக மழை


புதுக்கோட்டை மாவட்டத்தில் பரவலாக மழை
x
தினத்தந்தி 4 Jun 2021 10:49 PM IST (Updated: 4 Jun 2021 10:49 PM IST)
t-max-icont-min-icon

புதுக்கோட்டை மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது.
பரவலாக மழை
கேரளாவில் நேற்று முன்தினம் தென்மேற்கு பருவமழை காலம் தொடங்கியது. தமிழகத்திலும் இந்த பருவத்தில் ஆங்காங்கே மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. அந்தவகையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக புதுக்கோட்டை, திருச்சி உள்பட 7 மாவட்டங்களில் பரவலாக மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் கணித்திருந்தது.
அதன்படி புதுக்கோட்டையில் நேற்று மாலை பரவலாக மழை பெய்தது. பகல் முழுவதும் வெயில் அடித்த நிலையில் மாலையில் வானில் கருமேகங்கள் திரண்டு இருந்்தன. மாலை 5 மணிக்கு மேல் மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை ஓரே சீராக பரவலாக பெய்தது. மேலும் காற்றும் பலமாக வீசியது.
பொதுமக்கள் மகிழ்ச்சி
இந்த திடீர் மழையால் சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. வாகனங்களில் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி வாகனஓட்டிகள் சென்றனர். இந்த மழை ஒரு மணி நேரத்திற்கு மேலாக பெய்தது. அதன்பின் மழை தூறியபடி இருந்தது. புதுக்கோட்டையில் அக்னிநட்சத்திரம் முடிந்த பின்னும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் தென்மேற்கு பருவமழையால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Related Tags :
Next Story