மாவட்ட செய்திகள்

சிதம்பரத்தில்டாஸ்மாக் கடை சுவரில் துளைப்போட்டு மதுபாட்டில்கள் திருட்டுமர்ம மனிதர்கள் கைவரிசை + "||" + Theft of liquor bottles

சிதம்பரத்தில்டாஸ்மாக் கடை சுவரில் துளைப்போட்டு மதுபாட்டில்கள் திருட்டுமர்ம மனிதர்கள் கைவரிசை

சிதம்பரத்தில்டாஸ்மாக் கடை சுவரில் துளைப்போட்டு மதுபாட்டில்கள் திருட்டுமர்ம மனிதர்கள் கைவரிசை
சிதம்பரத்தில் டாஸ்மாக் கடை சுவரில் துளைப்போட்டு மதுபாட்டில்களை மர்ம மனிதர்கள் திருடி சென்றுவிட்டனர்.
சிதம்பரம், 

சிதம்பரம் அண்ணாமலை நகர் அருகே, பொராம்பட்டு மெயின் ரோட்டில் டாஸ்மாக் கடை உள்ளது. இந்த கடையில் மேற்பார்வையாளராக பால்ராஜ்  (வயது 47) என்பவர் பணிபுரிந்து வருகிறார். முழு ஊரடங்கு காரணமாக கடந்த மாதம் 9-ந்தேதி கடையை பூட்டினர். இதன் பின்னர் பால்ராஜ் தினசரி கடையை வந்து பார்த்து சென்றுள்ளார்.

நேற்று முன்தினம் கடையை வந்து பார்த்த போது, பின்பக்க சுவரில் துளை போடப்பட்டு இருந்தது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர், கடையின் உள்ளே சென்று பார்த்தார். அப்போது, கடையில் இருந்த 100 மதுபாட்டில்களை காணவில்லை.

வலைவீச்சு

இதுபற்றி அவர் அண்ணாமலை நகர்  போலீசுக்கு தகவல் தெரிவித்தார். 
அதன்பேரில்  இன்ஸ்பெக்டர் சீனிபாபு, சப்-இன்ஸ்பெக்டர் கணபதி நேரில் சென்று டாஸ்மாக் கடையை பார்வையிட்டனர். 

பின்பக்க சுவரை துளைப்போட்டு, அதன் வழியாக கடைக்குள் புகுந்த மர்ம மனிதர்கள் ரூ.19 ஆயிரத்து 500 மதிப்பிலான மதுபாட்டில்களை திருடி சென்று இருப்பது தெரியவந்தது. 

இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம மனிதர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

தொடர்புடைய செய்திகள்

1. ரத்தினகிரி அருகே; டாஸ்மாக் கடையில் ரூ.1 லட்சம் மதுபாட்டில்கள் திருட்டு
ரத்தினகிரி அருகே டாஸ்மாக் கடையில் சுவரில் துளையிட்டு ரூ.1 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்கள் திருடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
2. சேத்தியாத்தோப்பு அருகே பரபரப்பு டாஸ்மாக் கடை சுவரில் துளைப்போட்டு மதுபாட்டில்கள் திருட்டு மர்ம மனிதர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
சேத்தியாத்தோப்பு அருகே டாஸ்மாக் கடை சுவரில் துளைப்போட்டு ரூ.97 ஆயிரம் மதிப்பிலான மதுபாட்டில்களை திருடி சென்ற மர்ம மனிதர்களை போலீசார் வலைவீசி தேடி வருகி்ன்றனர்.
3. புளியங்குடியில் டாஸ்மாக் கடையில் மது பாட்டில்கள் திருட்டு
புளியங்குடியில் டாஸ்மாக் கடையில் மது பாட்டில்களை மர்மநபர்கள் திருடி சென்றனர்.
4. டாஸ்மாக் கடை பூட்டை உடைத்து 487 மதுபாட்டில்கள் திருட்டு
திருப்பாச்சேத்தி அருகே டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து 487 மதுபாட்டில்கள் திருடப்பட்டன.