குறுவை சாகுபடிக்கு தேவையான இடுபொருட்கள் தயார்


குறுவை சாகுபடிக்கு தேவையான இடுபொருட்கள் தயார்
x
தினத்தந்தி 4 Jun 2021 11:08 PM IST (Updated: 4 Jun 2021 11:08 PM IST)
t-max-icont-min-icon

மடத்துக்குளம் சுற்று வட்டாரப் பகுதியில் குறுவை சாகுபடிக்கு தேவையான இடுபொருட்கள் தயார்

மடத்துக்குளம்
மடத்துக்குளம் சுற்று வட்டாரப் பகுதியில் தற்போது அமராவதி பழைய ஆயக்கட்டு பாசன விவசாய நிலங்கள் அமைந்துள்ள மடத்துக்குளம், சோழமாதேவி, கணியூர், கடத்தூர், காரத்தொழுவு, ஆகிய பகுதிகளில் பல ஆயிரக்கணக்கான விவசாய நிலங்களில் நெல் நடவு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் மடத்துக்குளம் வட்டாரப் பகுதியில் உள்ள விவசாயிகளுக்கு நெல் நடவு பணிகளுக்கு தேவைப்படும் வேளாண் இடுபொருட்கள் அனைத்தும் தற்போது இருப்பு உள்ளது.இது குறித்து வேளாண் உதவி இயக்குனர் ராஜேஸ்வரி கூறியதாவது:-
மடத்துக்குளம் வட்டாரத்தில் தற்போது ஜூன் மாதத்தில் தொடங்கும் குறுவை சாகுபடிக்கு தேவையான வேளாண் இடுபொருட்கள் மடத்துக்குளம் வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. குறுவை சாகுபடிக்கு ஏற்ற நெல் ரகம் கோ 51 விதைகள் மற்றும் உளுந்து வம்பன் 8 ரகம் விதைகள் தற்போது வினியோகம் செய்திட தயார் நிலையில் உள்ளது. மேலும் திட மற்றும் திரவ உயிர் உரங்கள் அசோஸ்பைரில்லம் பாஸ்போபாக்டீரியா, வைரஸ் பாக்டீரியா, அசோஸ் ஸ்பைரிலம், பாஸ்போ பாக்டீரியா, பொட்டாஸ் பாக்டீரியா, அசோக் ரைசோபியம், ஆகியவை இருப்பில் உள்ளது. உயிர் உரங்கள் பயன்படுத்துவதன் மூலம் ரசாயன உரங்களின் தேவையை குறைக்க இயலும்.மேலும் தென்னை தானியங்கள் மற்றும் பயிறு வகைகளுக்கு தேவையான நுண்ணூட்டம் இருப்பில் உள்ளது. மடத்துக்குளம் வட்டார விவசாயிகள் அனைவரும் தங்களுக்கு தேவையான இடுபொருட்களை மடத்துக்குளம் வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தில் பெற்றுக்கொள்ளலாம். 
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story