ஊட்டியில் தடுப்பூசி மையம் மூடல்


ஊட்டியில் தடுப்பூசி மையம் மூடல்
x
தினத்தந்தி 4 Jun 2021 11:15 PM IST (Updated: 4 Jun 2021 11:15 PM IST)
t-max-icont-min-icon

ஊட்டியில் தடுப்பூசி மையம் மூடல்.

ஊட்டி,

நீலகிரி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. சமீபத்தில் 7,000 டோஸ் கொரோனா தடுப்பூசி வரவழைக்கப்பட்டது. நேற்று முன்தினம் ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, கூடலூர் என அனைத்து பகுதிகளிலும் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு முதல் டோஸ், 45 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு 2-வது டோஸ் போடப்பட்டது. தற்போது தடுப்பூசி இருப்பு இல்லை. 

அதன் காரணமாக ஊட்டி தனியார் பள்ளியில் நேற்று தடுப்பூசி முகாம் நடைபெறவில்லை. இதனால் மையத்தின் நுழைவுவாயில் மூடப்பட்டு, உள்பகுதி வெறிச்சோடி காணப்பட்டது. ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளிட்ட மையங்களில் தடுப்பூசி செலுத்த வந்த பொதுமக்கள் தட்டுப்பாடு காரணமாக திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதனால் அவர்கள் ஏமாற்றம் அடைந்தனர். நீலகிரியில் இதுவரை ஒரு லட்சத்து 95 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது. தடுப்பூசி தொடர்ந்து வந்தால் மக்களுக்கு செலுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story