ஒரே நாளில் கொரோனாவுக்கு 5 பேர் பலி


ஒரே நாளில் கொரோனாவுக்கு 5 பேர் பலி
x
தினத்தந்தி 4 Jun 2021 11:49 PM IST (Updated: 4 Jun 2021 11:49 PM IST)
t-max-icont-min-icon

சிவகங்கை மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 5 பேர் சிகிச்சை பலனின்றி பலியாகினர். மேலம் 187 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சிவகங்கை,ஜூன்
சிவகங்கை மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 5 பேர் சிகிச்சை பலனின்றி பலியாகினர். மேலம் 187 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
187 பேர்
சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது.  இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் 187 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.
அரசு மருத்துவமனை, தனியார் மருத்துவமனை மற்றும் வீட்டு தனிமையில் உள்ளவர்கள் என 1,867 பேர் தற்போது சிகிச்சையில் உள்ளனர். நேற்று ஒரே நாளில் 264 பேர் கொரோனாவில் இருந்து குணம் அடைந்து வீடு திரும்பினர்.
5 பேர் பலி
மேலும் கொரோனா தொற்று காரணமாக ராமநாதபுரத்தை சேர்ந்த 55 வயதுள்ள பெண் ஒருவரும், சிவகங்கையை சேர்ந்த 50 வயது ஆண் ஒருவரும், 78 வயது முதியவர் ஒருவரும், 53 வயது ஆண் ஒருவரும், 67 வயதுள்ள முதியவர் ஒருவரும், சிவகங்கை அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்து போனார்கள்.

Next Story