நெல்லையில் பலத்த மழை


நெல்லையில் பலத்த மழை
x
தினத்தந்தி 5 Jun 2021 12:43 AM IST (Updated: 5 Jun 2021 12:43 AM IST)
t-max-icont-min-icon

நெல்லையில் நேற்று பலத்த மழை பெய்தது.

நெல்லை:
நெல்லை மாநகர பகுதியான நெல்லை சந்திப்பு, டவுன், பேட்டை, பழைய பேட்டை, பாளையங்கோட்டை ஆகிய பகுதிகளில் நேற்று காலை வழக்கம்போல் வெயில் அடித்தது. மாலை 3 மணி வரை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது.

அதன்பிறகு திடீரென வானில் கருமேகங்கள் திரண்டன. சிறிது நேரத்தில் பலத்த மழை பெய்ய தொடங்கியது. சுமார் ½ மணி நேரம் மழை நீடித்தது.  இந்த மழை காரணமாக, நெல்லை சந்திப்பு, பாளையங்கோட்டை, டவுன், பேட்டை, பழைய பேட்டை, தச்சநல்லூர், சுத்தமல்லி, கொண்டாநகரம் உள்ளிட்ட பகுதிகளில் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் குளம்போல் தண்ணீர் தேங்கியது.

இந்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் சில இடங்களில் சாரல் மழை போல் தூறிக்கொண்டே இருந்தது.

Next Story