மண் சரிவு ஏற்பட்டு பாறை விழுந்ததில் தொழிலாளி பலி


மண் சரிவு ஏற்பட்டு பாறை விழுந்ததில் தொழிலாளி பலி
x
தினத்தந்தி 4 Jun 2021 7:33 PM GMT (Updated: 4 Jun 2021 7:33 PM GMT)

வத்திராயிருப்பு அருேக மண் சரிவு ஏற்பட்டு பாைற விழுந்ததில் ஆடு மேய்க்க சென்ற தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.

வத்திராயிருப்பு, 
வத்திராயிருப்பு அருேக மண் சரிவு ஏற்பட்டு பாைற விழுந்ததில் ஆடு மேய்க்க சென்ற தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார். 
பலத்த மழை 
வத்திராயிருப்பு அருகே வ.மீனாட்சிபுரம் கிராமத்தை சேர்ந்தவர் முருகன் (வயது50). இவர் அப்பகுதியில் ஆடு மேய்க்கும் தொழில் செய்து வந்தார்.  இந்தநிலையில் நேற்று வத்திராயிருப்பு அருகே உள்ள வ.மீனாட்சிபுரம் வண்ணாம்பாறை அருகே ஆடு மேய்க்க சென்றுள்ளார். இந்தநிலையில் வத்திராயிருப்பு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்தது. 
தொழிலாளி பலி 
ஆடு மேய்க்க சென்ற முருகன் நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு திரும்பாததால் சந்தேகம் அடைந்த அவரது உறவினர்கள் அவரை தேடி சென்றனர். மழை பெய்ததால் நனையாமல் இருக்க பாறையின் கீழ் இருந்தவர் மீது மண் சரிவு ஏற்பட்டு பாறை விழுந்ததில் சம்பவ இடத்திலேயே இறந்து கிடந்தது தெரியவந்தது. இதுகுறித்து வத்திராயிருப்பு போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் மற்றும் தீயணைப்பு மீட்பு படையினர் மீட்பு பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். மேலும் பாறை அதிக எடையுள்ளதாக இருப்பதால் பாறையை உடைத்து தான் உடலை மீட்க வேண்டிய நிலை ஏற்பட்டது. பாறையை உடைப்பதற்கான எந்திரம் வரவழைக்கப்பட்டு பாறையை உடைத்து உடலை மீட்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.

Next Story