திருச்சியில் ரூ.10 லட்சம் கொள்ளை வழக்கில் 3 பேர் கைது


திருச்சியில் ரூ.10 லட்சம் கொள்ளை வழக்கில் 3 பேர் கைது
x
தினத்தந்தி 5 Jun 2021 1:06 AM IST (Updated: 5 Jun 2021 1:06 AM IST)
t-max-icont-min-icon

திருச்சியில் ரூ.10 லட்சம் கொள்ளை அடித்த வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருச்சி, 
திருச்சியில் ரூ.10 லட்சம் கொள்ளை அடித்த வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

கொள்ளை வழக்கு

திருச்சி ஆழ்வார்தோப்பு காஜாதோப்பை சேர்ந்தவர் நசஜீமா (வயது 72). சம்பவத்தன்று நள்ளிரவு இவரது வீட்டின் பக்கவாட்டு ஜன்னல் கம்பியை உடைத்து மர்ம நபர்கள் உள்ளே புகுந்தனர். பீரோவில் இருந்த ரூ.10 லட்சம் மற்றும் வெளிநாட்டு கரன்சிகளை கொள்ளையடித்து சென்றனர். இந்த சம்பவம் குறித்து தில்லைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வந்தனர்.

3 பேர் கைது 

இந்தநிலையில் இந்த வழக்கில் தொடர்புடைய  தென்னூரை சேர்ந்த அப்துல்காதர் (21), தவ்பீஅகமது (23), அண்டகொண்டான் பகுதியை சேர்ந்த மன்சூர்அலி (24) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் ரூ.9 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு கரன்சிகளை பறிமுதல் செய்தனர். மேலும், 2 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story