நெல்லையில் 1 லட்சம் மரக்கன்றுகள் நடும் பணி தொடக்கம்


நெல்லையில் 1 லட்சம் மரக்கன்றுகள் நடும் பணி தொடக்கம்
x
தினத்தந்தி 5 Jun 2021 1:12 AM IST (Updated: 5 Jun 2021 1:12 AM IST)
t-max-icont-min-icon

கருணாநிதி பிறந்தநாளையொட்டி நெல்லையில் 1 லட்சம் மரக்கன்றுகள் நடும் பணியை கலெக்டர் விஷ்ணு தொடங்கி வைத்தார்.

நெல்லை:
மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் பிறந்த நாளையொட்டி நெல்லை மாவட்டத்தில் 1 லட்சம் மரக்கன்றுகள் நடப்படுகிறது. இந்த மரக்கன்றுகள் நடும் பணியை கலெக்டர் விஷ்ணு நெல்லை கங்கைகொண்டான் புள்ளிமான்கள் சரணாலயத்தில் மரக்கன்றுகளை நட்டு தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறியதாவது:-

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் பிறந்த நாளையொட்டி நெல்லை மாவட்டத்தில் 1 லட்சம் மரக்கன்றுகள் நட்டு மாவட்டத்தை பசுமையாக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார். அதன்படி நெல்லை கங்கைகொண்டான் புள்ளிமான்கள் சரணாலயத்தில் 1,000 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளது. விரைவில் மாவட்டம் முழுவதும் 99 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்படும். ஆலமரம் புங்கமரம், வேங்கை, நாவல், கொடுக்காப்புளி உள்ளிட்ட மரங்கள் நடப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார். 

நிகழ்ச்சியில் கூடுதல் முதன்மை வனப்பாதுகாவலர் யோகேஷ் சிங், வனப்பாதுகாவலர் செந்தில்குமார், மாவட்ட வன அலுவலர் கவுதம், வனச்சரக அலுவலர் கருப்பையா, நெல்லை தாசில்தார் பகவதிபெருமாள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story