சாராயம் விற்ற 2 பேர் கைது


சாராயம் விற்ற 2 பேர் கைது
x
தினத்தந்தி 5 Jun 2021 2:04 AM IST (Updated: 5 Jun 2021 2:04 AM IST)
t-max-icont-min-icon

வேப்பந்தட்டை அருகே சாராயம் விற்ற 2 பேரை கைது செய்து, 35 பாக்கெட் சாராயத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.

வேப்பந்தட்டை:

பாக்கெட் சாராயம்
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள கை.களத்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிக்கந்தர் பாட்ஷா தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பாதாங்கி கிராமம் அருகே 2 பேர் சந்தேகத்திற்கு இடமான வகையில் மூட்டையுடன், மோட்டார் சைக்கிளில் நின்று கொண்டிருந்தனர்.
அவர்களை போலீசார் பிடித்து விசாரித்தனர். இதில், 35 பாக்கெட் சாராயத்தை விற்பனைக்காக சாக்குப்பையில் வைத்திருந்தது தெரியவந்தது. மேலும் விசாரணையில், அவர்கள் பாதாங்கி கிராமத்தை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி (வயது 33), பால்ராஜ்(31) என்பதும், அவர்கள் சாராய விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது.
2 பேர் கைது
இதைத்தொடர்ந்து போலீசார், அவர்கள் 2 பேரையும் கைது செய்து அவர்களிடம் இருந்து 35 பாக்கெட் சாராயத்தை பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Next Story