மணல் கடத்திய மாட்டு வண்டி தொழிலாளி மீது வழக்கு


மணல் கடத்திய மாட்டு வண்டி தொழிலாளி மீது வழக்கு
x
தினத்தந்தி 5 Jun 2021 2:04 AM IST (Updated: 5 Jun 2021 2:04 AM IST)
t-max-icont-min-icon

மணல் கடத்திய மாட்டு வண்டி தொழிலாளி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

தா.பழூர்:
அரியலூர் மாவட்டம் தா.பழூரை அடுத்த தென்கச்சிபெருமாள்நத்தம் கிராம நிர்வாக அதிகாரி அசோக்குமார் தனது உதவியாளருடன் கீழகுடிகாடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது அந்த வழியாக தென்கச்சிபெருமாள்நத்தம் கிராமத்தை சேர்ந்த வரதராஜன்(வயது 62) அரசு அனுமதியின்றி மாட்டு வண்டியில் மணல் ஏற்றி வந்தது தெரியவந்தது. இது குறித்து அசோக்குமார் தா.பழூர் போலீசில் கொடுத்த புகாரின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தசாமி வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

Next Story