நோயாளிகளின் உறவினர்களால் நோய் பரவும் அபாயம்
திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் கொரோனா பயம் கொஞ்சமும் இல்லாமல் நோயாளிகளை பார்க்க வரும் உறவினர்கள் கூட்டம் அதிகம் காணப்படுகிறது. இதனால் கொரோனா பரவும் அபாயம் உருவாகியுள்ளது.
திண்டுக்கல்:
திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் 500-க்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெறுகின்றனர். அதேபோல் இதர நோயாளிகள் பலரும் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர்.
மேலும் கொரோனா பரிசோதனைக்காக தினமும் பலர் குவிகின்றனர். இதுதவிர கொரோனா நோயாளிகள் உள்பட அனைத்து நோயாளிகளுக்கும் உதவியாக உறவினர்களும் வருகின்றனர்.
இதனால் திண்டுக்கல் அரசு மருத்துவமனை தினமும் பரபரப்பாக காணப்படுகிறது. இதற்கிடையே நோயாளிகளை பார்க்க வரும் உறவினர்கள், மருத்துவமனை வளாகத்தில் ஆங்காங்கே கூட்டமாக நின்றனர். மேலும் சமூக இடைவெளியை சிறிதும் கடைபிடிக்காமல் நெருக்கமாக நிற்கின்றனர். அதை யாரும் கண்டு கொள்வதாக தெரியவில்லை.
அதேநேரம் அந்த கூட்டத்தில் ஒருவருக்கு கொரோனா தொற்று இருந்தாலும், அனைவருக்கும் பரவி விடும் ஆபத்து உள்ளது. இதனால் கொரோனாவை குணப்படுத்தும் மருத்துவமனையிலேயே, தொற்று ஏற்படும் இடமாக மாறிவிடும்.
இதை தவிர்க்க அரசு மருத்துவமனை வளாகத்தில் நோயாளிகளின் உறவினர்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து நிற்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
Related Tags :
Next Story