பிளஸ்-2 தேர்வு நடத்த 60 சதவீதம் பேர் ஆதரவு


பிளஸ்-2 தேர்வு நடத்த 60 சதவீதம் பேர் ஆதரவு
x
தினத்தந்தி 5 Jun 2021 2:31 AM IST (Updated: 5 Jun 2021 2:31 AM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வு நடத்த 60 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்து இருக்கின்றனர்.

திண்டுக்கல்: 

தமிழகத்தில் கொரோனா பரவல் எதிரொலியாக அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டன. 

அதோடு 1 முதல் பிளஸ்-1 வரையிலான மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டு விட்டது. அதேநேரம் பிளஸ்-2 தேர்வில் மாணவர்கள் பெறும் மதிப்பெண்களே, உயர்கல்வியை தீர்மானிக்கிறது.


ஆனால், கொரோனா பரவல் இருப்பதால் தற்போது தேர்வை நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, பிளஸ்-2 தேர்வை நடத்த வேண்டுமா? அல்லது தேர்வை நடத்த வேண்டாமா? என்பது குறித்து மாணவர்கள், பெற்றோர்கள், கல்வியாளர்களிடம் கருத்து கேட்கும்படி அரசு உத்தரவிட்டது. 

இதையடுத்து அனைத்து மாவட்டங்களிலும் கருத்து கேட்கப்பட்டது.இதில் திண்டுக்கல் மாவட்டத்தை பொறுத்தவரை 212 மேல்நிலைப்பள்ளிகளில் 21 ஆயிரத்து 200 மாணவ-மாணவிகள் பிளஸ்-2 படித்து வருகின்றனர்.

 இவர்களிடம் அந்தந்த பள்ளிகள் மூலம் கருத்து கேட்கப்பட்டது. அதேபோல் மாணவர்களின் பெற்றோர், கல்வியாளர்களிடமும் கருத்து கேட்கப்பட்டது.

 அதில் 60 சதவீதம் பேர் கொரோனா பரவல் குறைந்ததும் பிளஸ்-2 தேர்வை நடத்த வேண்டும் என்று கருத்து தெரிவித்து இருக்கின்றனர். இதன் விவரம் பள்ளி கல்வி துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.

Next Story