பெங்களூருவில் இருந்து சேலத்துக்கு கடத்தி வரப்பட்ட 7,538 மதுபாட்டில்கள் பறிமுதல்-8 பேர் கைது


பெங்களூருவில் இருந்து சேலத்துக்கு கடத்தி வரப்பட்ட 7,538 மதுபாட்டில்கள் பறிமுதல்-8 பேர் கைது
x
தினத்தந்தி 5 Jun 2021 4:18 AM IST (Updated: 5 Jun 2021 4:18 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூருவில் இருந்து சேலத்துக்கு கடத்தி வரப்பட்ட 7 ஆயிரத்து 538 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக 8 பேைர போலீசார் கைது செய்தனர்.

கருப்பூர்:
பெங்களூருவில் இருந்து சேலத்துக்கு கடத்தி வரப்பட்ட 7 ஆயிரத்து 538 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக 8 பேைர போலீசார் கைது செய்தனர்.
வாகன சோதனை
 கொரோனா பரவலை தடுக்க முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளன. இதனால் கர்நாடகாவில் இருந்து சேலத்துக்கு மதுபாட்டில்கள் கடத்தி வந்து விற்பனை செய்வதாக புகார் எழுந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். 
சேலம் இரும்பாலை மதுவிலக்கு பிரிவு போலீசார் மேச்சேரி அருகே வாகன சோதனை நடத்தினர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு வேனை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அதில் பெட்டி, பெட்டியாக மதுபாட்டில்கள் இருந்தது தெரியவந்தது.
816 மதுபாட்டில்கள் பறிமுதல்
இதையடுத்து டிரைவரிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது அவர் எடப்பாடி அருகே உள்ள பூலாம்பட்டியை சேர்ந்த மாரியப்பன் (வயது 28) என்பதும், அவர் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து மதுபாட்டில்களை கடத்தி வந்ததும், அதனை சேலம், மேச்சேரி உள்ளிட்ட பல பகுதிகளில் அதிக விலைக்கு விற்பனை செய்ய இருந்ததும் தெரியவந்தது.
மேலும் அவர் வேனில் கடத்தி வந்த 816 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, மாரியப்பனை கைது செய்தனர்.
கருப்பூர் சுங்கச்சாவடி
சேலம்-பெங்களூரு தேசிய ெநடுஞ்சாலையில் உள்ள கருப்பூர் சுங்கச்சாவடி பகுதியில் சூரமங்கலம் உதவி கமிஷனர் நாகராஜன் உத்தரவின் பேரில் கருப்பூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சத்தியமூர்த்தி தலைமையில் போலீசார் நேற்று இரவு வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது ஒரு கூரியர் வாகனத்தில் பெங்களூருவில் இருந்து சேலத்துக்கு மதுபாட்டில்கள் கடத்தி வரப்பட்டது தெரியவந்தது. அந்த வாகனத்தில் அட்டை பெட்டிகளில் மொத்தம் 5 ஆயிரத்து 664 மதுபாட்டில்கள் சிக்கின. மற்றொரு வாகனத்தில் 652 மதுபாட்டில்களும், ஒரு லாரியில் கடத்தி வரப்பட்ட 406 மதுபாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டன. இதன் மதிப்பு ரூ.5 லட்சம் இருக்கும் என்று போலீசார் தெரிவித்தனர்.
7 பேர் கைது
மதுபாட்டில்களை கடத்தி வந்த திருவாரூர் மாவட்டம் ராஜமன்னார்குடியை சேர்ந்த ராஜேஷ்குமார் (24), கிருஷ்ணகிரியை சேர்ந்த சந்தோஷ் (32), பெங்களூருவை சேர்ந்த இளங்கோ (38), உளுந்தூர்பேட்டையை சேர்ந்த ஸ்ரீதர் (21), சேலம் பெரியபுதூரை சேர்ந்த ராபர்ட் (53), ஓமலூர் கோட்டகவுண்டம்பட்டியை சேர்ந்த கிருத்திக்ராஜன் (38), சாமிநாயக்கன்பட்டியை சேர்ந்த உதயசூரியன் (24) ஆகிய 7 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் 3 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
சேலத்தில் நேற்று ஒரே நாளில் பெங்களூருவில் இருந்து சேலத்துக்கு கடத்தி வரப்பட்ட மொத்தம் 7 ஆயிரத்து 538 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன், 8 பேர் கைது செய்யப்பட்டனர்.

Next Story