திருவள்ளூர், பூந்தமல்லியில் 53 பேருக்கு உதவித்தொகை


திருவள்ளூர், பூந்தமல்லியில் 53 பேருக்கு உதவித்தொகை
x
தினத்தந்தி 5 Jun 2021 6:53 AM IST (Updated: 5 Jun 2021 6:53 AM IST)
t-max-icont-min-icon

திருவள்ளூர், பூந்தமல்லியில 53 பேருக்கு உதவித்தொகை வழங்கப்பட்டது.

திருவள்ளூர்,

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க நேற்று திருவள்ளூர் தாசில்தார் அலுவலகத்தில் வருவாய்த்துறை சார்பாக உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர் திட்டம் தொடக்க விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு திருவள்ளூர் தொகுதி எம்.எல்.ஏ. வி.ஜி. ராஜேந்திரன் தலைமை தாங்கினார். அப்போது அவர் உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர் திட்டத்தை தொடங்கி வைத்து ஏற்கனவே பொதுமக்கள் வழங்கிய மனுக்களை பரிசீலித்து் 21 பயனாளிகளுக்கு முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, ஊனமுற்றோர் உதவித்தொகைக்கான ஆணைகளை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் திருவள்ளூர் தாசில்தார் செந்தில்குமார், மண்டல துணை தாசில்தார்கள் சசிகலா, சண்முகசுந்தரம், சரண்யா, திருவள்ளூர் நகர தி.மு.க. செயலாளர் ரவிச்சந்திரன், ஒன்றிய செயலாளர்கள் ரமேஷ், கூளூர் ராஜேந்திரன், மகாலிங்கம் நிர்வாகிகள் காஞ்சிபாடி சரவணன், சிட்டிபாபு உட்பட பலர் கலந்து கொண்டனர்.

பூந்தமல்லி

பூந்தமல்லி வட்டத்திற்கு உட்பட்ட பூந்தமல்லி தாசில்தார் அலுவலகத்தில் உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர் திட்டத்தின் கீழ் 32 பயனாளிகளுக்கு முதியோர் மற்றும் விதவைகளுக்கான உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி பூந்தமல்லி தாசில்தார் சங்கர் தலைமையில் நடைபெற்றது. இதில் பூந்தமல்லி எம்.எல்.ஏ. கிருஷ்ணசாமி கலந்து கொண்டு 32 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மேலும் 136 மனுக்கள் தற்போது மீண்டும் பெறப்பட்டுள்ளது. அந்த மனுக்கள் மீது விசாரணை நடத்தப்பட்டு தீர்வு காணப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து பூந்தமல்லி அரசு பணிமனையில் உள்ள அரசு பஸ் டிரைவர்கள், கண்டக்டர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு தடுப்பூசி போடும் பணி நடந்து வருகிறது. இதனை எம்.எல்.ஏ. கிருஷ்ணசாமி பார்வையிட்டார்.

நிகழ்ச்சியில் ஒன்றிய சேர்மன் ஜெயக்குமார், நகர செயலாளர் ரவிக்குமார் உள்ளிட்ட பலர் கொண்டனர்.

Next Story