திருச்சியில் இரண்டாவது நாளாக கொரோனா தடுப்பூசி போடுவதற்காக பொதுமக்கள் குவிந்தனர்
திருச்சியில் இரண்டாவது நாளாக இளம்பெண்கள் உள்பட கொரோனா தடுப்பூசி போடுவதற்காக ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் குவிந்தனர்.
திருச்சி,
திருச்சியில் இரண்டாவது நாளாக இளம்பெண்கள் உள்பட கொரோனா தடுப்பூசி போடுவதற்காக ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் குவிந்தனர்.
கொரோனா தடுப்பூசி
தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை வேகத்தை கட்டுப்படுத்துவதற்காக தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் திருச்சி மாநகராட்சியை பொறுத்தவரை நேற்று முன்தினம் பொன்மலை, அரியமங்கலம், கோ- அபிஷேகபுரம், ஸ்ரீரங்கம் கோட்ட அலுவலகங்களிலும், திருச்சி கலையரங்கம் புதிய திருமண மண்டபம், தேவர் ஹால் ஆகிய இடங்களில் 18 முதல் 44 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு தடுப்பூசி இலவசமாக போடப்பட்டது.
இதில் கலையரங்கம் வளாகத்தில் ஒரே நேரத்தில் ஏராளமானவர்கள் வந்து குவிந்ததால் பலர் திருப்பி அனுப்பப்பட்டனர். நேற்று 2-வது நாளாக மாநகராட்சி சார்பில் கலையரங்கம் புதிய திருமண மண்டபம், தேவர் ஹால் ஆகிய இடங்களில் மட்டும் கொரோனா தடுப்பூசி வழங்கும் பணி நடைபெற்றது.
நீண்ட வரிசை
இந்நிலையில் தேவர் ஹாலில் தடுப்பூசி போடுவதற்காக ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வந்து குவிந்தனர். அவர்கள் நீண்ட வரிசையில் நிற்க வைக்கப்பட்டனர். வரிசையில் நின்றவர்களில் ஆண்களைவிட பெண்கள் அதிக அளவில் இருந்தனர். அவர்களிலும் இளம் பெண்களிடம் ஆர்வம் அதிகம் இருந்ததை காணமுடிந்தது. காலையில் தொடங்கிய இந்த பணி மாலை வரை நடைபெற்றது.
ஏமாற்றம்
இதேபோல கலையரங்கம் திருமண மண்டபத்திலும் கொரோனா தடுப்பூசி போடுவதற்காக நேற்று ஏராளமானவர்கள் வந்து குவிந்தனர். ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு பின்னரும் ஏராளமானவர்கள் வந்து கொண்டே இருந்ததால் அவர்களை போலீசார் உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை. நுழைவுவாசல் கதவை மூடி மூடி விட்டனர். இதனால் நேற்றும் பலர் ஊசி போட முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பினார்கள்.
Related Tags :
Next Story