மோகனூர் அருகே சிறுமியை மிரட்டி பலாத்காரம்: அண்ணன் கைது
மோகனூர் அருகே சிறுமியை மிரட்டி பலாத்காரம்: அண்ணன் கைது
மோகனூர்:
மோகனூர் அருகே சிறுமியை மிரட்டி பலாத்காரம் செய்த அண்ணனை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
சிறுமி
திருச்சி மாவட்டம் துறையூர் அம்மாபேட்டை பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி ஒருவருக்கு 3 மனைவிகள் உள்ளனர். முதல் மனைவி அம்மாபேட்டையிலும், 2-வது மனைவி தனது 3 மகள்களுடன் நாமக்கல் மாவட்டம் மோகனூர் பகுதியிலும் வசித்து வருகின்றனர். இதில் 14 வயதான 3-வது மகளுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அதில் சிறுமி 4 மாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.
இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தாய் மோகனூர் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். முதற்கட்ட விசாரணையில் கூலித்தொழிலாளியின் முதல் மனைவியின் மகன் சுரேஷ் (வயது 31) என்பவர் மோகனூர் பகுதியில் உள்ள தனது சித்தி குடும்பத்தினருடன் தங்கி மேஸ்திரி வேலை செய்து வந்தார்.
சிறையில் அடைப்பு
அப்போது சித்தியின் 3-வது மகள் தங்கையான 14 வயது சிறுமியை மிரட்டி பலமுறை பாலியல் பலாத்காரம் செய்தது தெரிந்தது. இதையடுத்து கர்ப்பம் அடைந்த சிறுமியிடம் நடந்ததை வெளியில் சொன்னால் கொலை செய்வதாக மிரட்டியதும் தெரிய வந்தது.
இதையடுத்து சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த சுரேசை போக்சோ சட்டத்தில் கைது செய்த போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி நாமக்கல் கிளை சிறையில் அடைத்தனர்.
Related Tags :
Next Story