புதுச்சத்திரம் அருகே சிறுமியை கடத்திய தொழிலாளி போக்சோவில் கைது


புதுச்சத்திரம் அருகே சிறுமியை கடத்திய தொழிலாளி போக்சோவில் கைது
x
தினத்தந்தி 5 Jun 2021 9:11 AM IST (Updated: 5 Jun 2021 9:11 AM IST)
t-max-icont-min-icon

புதுச்சத்திரம் அருகே சிறுமியை கடத்திய தொழிலாளி போக்சோவில் கைது

நாமக்கல்:
புதுச்சத்திரம் அருகே திருமலைபட்டியை சேர்ந்த தொழிலாளி ஒருவரின் 15 வயது மகள் கடந்த மாதம் 29-ந் தேதி மாயமானார். இதுகுறித்து சிறுமியின் தந்தை புதுச்சத்திரம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், அதே ஊரை சேர்ந்த ரங்கசாமி மகன் கூலித்தொழிலாளியான கவுதம் (வயது 19) என்பவர் சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்றது தெரியவந்தது.  தொடர் விசாரணையில் அவர்கள் தர்மபுரி மாவட்டம் பென்னாகரத்தில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து அங்கு விரைந்து சென்ற போலீசார் சிறுமியை மீட்டதோடு, கவுதமை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். பின்னர் அந்த சிறுமியை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்த போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர். இதையடுத்து கவுதம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு நாமக்கல் கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.

Next Story