சென்னை காசிமேட்டில் வேப்ப மரத்தில் இருந்து பால் வடிந்ததாக பரபரப்பு; மஞ்சள் துணி கட்டி, மாலை அணிவித்து பெண்கள் வழிபாடு


சென்னை காசிமேட்டில் வேப்ப மரத்தில் இருந்து பால் வடிந்ததாக பரபரப்பு; மஞ்சள் துணி கட்டி, மாலை அணிவித்து பெண்கள் வழிபாடு
x
தினத்தந்தி 5 Jun 2021 11:27 AM GMT (Updated: 5 Jun 2021 11:27 AM GMT)

சென்னை காசிமேடு அரசு மாணவர்கள் காப்பகத்தின் அருகே உள்ள மைதானத்தில் உள்ள வேப்ப மரத்தில் இருந்து திடீரென பால் ேபான்ற திரவம் வடிந்ததாக கூறப்படுகிறது.

இந்த தகவல் அந்த பகுதி மக்கள் இடையே காட்டு தீப்போல பரவியது. பலரும் வேப்ப மரத்தை கடவுள் வடிவமாக பார்ப்பதனால், கடவுளின் செயலால்தான் இதுபோன்று அதிசயம் நிகழ்ந்து இருப்பதாக கூறினர். மேலும் பெண்கள், அந்த வேப்ப மரத்துக்கு மஞ்சள் துணி கட்டி, மாலைகள் அணிவித்து வழிபடத்தொடங்கினர். இதை கேள்விப்பட்ட காசிமேடு மற்றும் ராயபுரம் பகுதியைச் சேர்ந்த திரளான பொதுமக்கள், வேப்பமரத்தில் இருந்து பால் வடிவதை ஆச்சர்யத்துடன் பார்த்து வழிபட்டு சென்றனர். தங்களது வீடுகளில் இருந்து பாத்திரத்தை எடுத்து வந்து வேப்ப மரத்தில் இருந்து வழிந்த பாலை 
வழிபடுவதற்காக வீட்டுக்கு பிடித்துச் சென்றனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story