ஜோலார்பேட்டை அருகே ரெயிலில் ரேஷன் அரிசி கடத்தியதை தடுத்த அதிகாரிகள் மீது தாக்குதல்
ஜோலார்பேட்டை அருகே ரெயிலில் ரேஷன் அரிசி கடத்தியதை தடுத்த அதிகாரிகளை தாக்கி விட்டு 2 டன் ரேஷன் அரிசியுடன், 10 பேர் கும்பல் ரெயிலில் தப்பியது.
ஜோலார்பேட்டை
ரேஷன் அரிசி கடத்தல்
ஜோலார்பேட்டையிலிருந்து, பெங்களூரு செல்லும் ரெயிலில், சோமநாயக்கன்பட்டி ரெயில் நிலையத்தில் இருந்து ரேஷன் அரிசி கடத்துவதாக தகவல் கிடைத்தது. அதன்பேரில் நாட்றம்பள்ளி வட்ட வழங்கல் அலுவலர் நடராஜன் தலைமையில், உதவியாளர் அருள், ரெயில்வே போலீஸ்காரர் ஒருவர் என 3 பேரும் வருவாய் துறையினர் ஜோலார்பேட்டையை அடுத்த சோமாநாயக்கன்பட்டி ரெயில் நிலையத்தில் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது மர்ம நபர்கள் சுமார் 10 பேர் கொண்ட கும்பல் ஒன்று ரேஷன் அரிசி மூட்டைகளை ரெயில் ஏற்றிக்கொண்டிருந்தனர். இதை பார்த்த அதிகாரிகள் விரைந்து சென்று அவர்களை தடுக்க முயன்றனர்.
அதிகாரிகள் மீதுதாக்குதல்
இதனால் ஆத்திரம் அடைந்த அந்த கும்பல் திடீரென, அதிகாரிகளை தாக்கினர். இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் திகைத்து நின்றனர். ஆனால் அந்த கும்பல் உடனடியாக 2 டன் ரேஷன் அரிசியை ரெயிலில் ஏற்றிவிட்டனர். இந் நேரத்தில் ரெயில் புறப்பட்டதால் அவிசியுடன் அந்த கும்பல் ரெயிலில் தப்பி சென்று விட்டது.
மர்ம நபர்கள் தாக்கியதில் அதிகாரிகளுக்கு லேசான காயங்கள் ஏற்பட்டுட்டது. அதிகாரிகளை மர்ம நபர்கள் தாக்கிவிட்டு, ரெயிலில் அரிசி கடத்தி சென்றது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story