ராணிப்பேட்டையில் வேளாண் சட்ட நகல் எரிப்பு போராட்டம்
ராணிப்பேட்டையில் வேளாண் சட்ட நகல் எரிப்பு போராட்டம்
ராணிப்பேட்டை
விவசாயிகளுக்கும், விவசாயத்துக்கும் எதிரான வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி வேளாண் சட்ட நகல் எரிப்பு போராட்டத்தை விவசாய சங்கத்தினர் நேற்று ராணிப்பேட்டை முத்துக்கடையில் நடத்தினர். போராட்டத்துக்கு விவசாய சங்க மாவட்ட தலைவர் எல்.சி.மணி தலைமை தாங்கினார்.
வட்டார செயலாளர் ரமேஷ், வட்டார தலைவர் நிலவு குப்புசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மனோகர், சேட்டு ஆகியோர் போராட்டத்தில் பங்கேற்றனர். அவர்கள், வேளாண் சட்ட நகலை எரிக்க முயன்றபோது ராணிப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சாலமன் ராஜா தலைமையிலான போலீசார் விரைந்து வந்து தடுத்து நிறுத்தினர்.
மேலும் வேளர் சட்ட நகல் எரிப்பு போராட்டத்தில் ஈடுபட்ட விவசாய சங்கத்தினர் 5 பேர் மீது ராணிப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story