தடுப்பூசி போடக்கோரி பொதுமக்கள் வாக்குவாதம்
திருப்பூர் அரசு மருத்துவமனையில் தடுப்பூசி போடக்கோரி பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பூர
திருப்பூர் அரசு மருத்துவமனையில் தடுப்பூசி போடக்கோரி பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
அரசு மருத்துவமனை
திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்து வந்ததால் தடுப்பூசி செலுத்த பலரும் ஆர்வம் காட்டி வருகிறார்கள். இதன் காரணமாக மாவட்டம் முழுவதும் தடுப்பூசி பற்றாக்குறை ஏற்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை பல இடங்களில் தடுப்பூசி செலுத்தப்பட்டது. ஆனால் தற்போது குறிப்பிட்ட சில இடங்களில் மட்டுமே தடுப்பூசி செலுத்தப்படுகிறது.
இந்த பகுதிகளிலும் கூட்டம் அதிகமாக இருந்து வருவதால் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்து நின்று தடுப்பூசி செலுத்தி வருகிறார்கள். இந்நிலையில் திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நேற்று தடுப்பூசி போட பொதுமக்கள் நீண்ட வரிசையில் காலையில் இருந்தே காத்து நின்றனர்.
வாக்குவாதம்
இந்நிலையில் காலை 9 மணி அளவில் தடுப்பூசி வரவில்லை. இதனால் பொதுமக்கள் வீட்டிற்கு செல்லும்படி மருத்துவ பணியாளர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இதனால் பல மணி நேரம் காத்துநின்ற பொதுமக்கள் ஆத்திரம் அடைந்தனர். தொடர்ந்து அங்குள்ள மருத்துவ பணியாளர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
தடுப்பூசி போட வேண்டும் இல்லையென்றால் செல்ல மாட்டோம் என தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவர்களை சமாதானப்படுத்தி வீடுகளுக்கு அனுப்பிவைத்தனர்.
தெளிவான அறிக்கை
தடுப்பூசி போடப்படும் இடங்கள் மற்றும் தடுப்பூசியின் எண்ணிக்கை குறித்து தினமும் மாவட்ட நிர்வாகம் அல்லது சுகாதாரத்துறை தெளிவான அறிக்கை ஒன்றை வெளியிட வேண்டும். அப்போது தான் இதுபோன்ற பிரச்சினைகள் ஏற்படாது. பொதுமக்களும் சரியான இடத்திற்கு சென்று எந்தவித சிரமமும் இன்றி தடுப்பூசி செலுத்த வசதியாக இருக்கும்.
எனவே இது தொடர்பாக அதிகாரிகள் விரைவாக முடிவு மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.
இதுபோல் திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தினமும் ஆக்சிஜன் பயன்பாடு இருந்து வருகிறது. நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் ஆக்சிஜன் பயன்பாடும் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஆக்சிஜன் எந்திரங்கள் பராமரிப்பு இன்றி பல இடங்களில் இருந்து வருகிறது. இதனை முறையாக பராமரிக்க வேண்டும் என நோயாளிகள் கோரிக்கையும் விடுத்துள்ளனர்.
நல்லூர்
இதேபோல் நேற்று முதல் டோஸ் தடுப்பூசி போடப்படும் என தகவல் பரவியதால் கோவில்வழி அருகே நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு காலை 6 மணி முதல் பொதுமக்கள் குவிந்தனர். தாராபுரம் சாலையில் 200-க்கும் மேற்பட்டவர்கள் நீண்ட வரிசையாக காத்து நின்றனர். தகவல் அறிந்த சுகாதார பணியாளர்கள் சம்பவ இடம் வந்து இங்கு தடுப்பூசி போடப்படாது. தடுப்பூசி அலுவலக்திற்கு வரவில்லை என தெரிவித்தனர். மேலும் கோவில் வழி சுகாதார மையத்தில் பணியாற்றிய செவிலியர் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் சுகாதார வளாகம் திறக்கப்படாது என தெரிவித்தனர். அதனால் காலை முதல் காத்து நின்ற பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச்சென்றனர்.
Related Tags :
Next Story