மாற்றுத்திறனாளிகளுக்கு நிவாரண பொருட்கள்; போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் வழங்கினார்


மாற்றுத்திறனாளிகளுக்கு நிவாரண பொருட்கள்; போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் வழங்கினார்
x
தினத்தந்தி 5 Jun 2021 5:06 PM GMT (Updated: 5 Jun 2021 5:06 PM GMT)

எட்டயபுரத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு நிவாரண பொருட்களை, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் வழங்கினார்.

எட்டயபுரம், ஜூன்:
எட்டயபுரம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு விளாத்திகுளம் போலீஸ் துணை சூப்பிரண்டு பிரகாஷ் தலைமை தாங்கினார். எட்டயபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜின்னா பீர் முகமது முன்னிலை வகித்தார்.
நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார், கொரோனா ஊரடங்கு காலத்தில் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் 170 கிராமிய இசை கலைஞர்கள், மாற்றுத்திறனாளிகள், ஊர்க்காவல்படை வீரர்கள் குடும்பத்திற்கு அரிசி, காய்கறிகள் மற்றும் பலசரக்கு பொருட்கள் தொகுப்பினை வழங்கினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை எட்டயபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர்கள் முத்துவிஜயன், பொன்ராஜ் ஆகியோர் செய்திருந்தனர்.

Next Story