ஸ்ரீவைகுண்டத்தில் வாரச்சந்தை அமையும் இடத்தில் ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. ஆய்வு
ஸ்ரீவைகுண்டத்தில் வாரச்சந்தை அமையும் இடத்தில் ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார்.
ஸ்ரீீவைகுண்டம், ஜூன்:
ஸ்ரீவைகுண்டம் தாமிரபரணி ஆற்றின் கரையோரம் கொட்டப்படும் குப்பைகளுக்கு தீ வைத்து எரிப்பதால் சுவாசக் கோளாறால் சிரமப்படுவதாகவும், எனவே குப்பைகளை கொட்டுவதற்கு மாற்று இடம் தேர்வு செய்ய வேண்டும் எனவும் ஸ்ரீவைகுண்டம் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். அதன்பேரில் ஸ்ரீவைகுண்டம் எம்.எல்.ஏ. ஊர்வசி அமிர்தராஜ், குப்பைகள் கொட்டப்படும் இடத்திற்கு சென்று பார்வையிட்டார். பின்னர் ஸ்ரீவைகுண்டத்தில் வாரச்சந்தை அமையும் இடத்தை நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது தாசில்தார் கோபாலகிருஷ்ணன், சுகாதார ஆய்வாளர் பூவையா மற்றும் பலர் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story