நெகமம் பகுதியில் ஊரடங்கை மீறிய 150 பேரின் வாகனங்கள் பறிமுதல்


நெகமம் பகுதியில் ஊரடங்கை மீறிய 150 பேரின் வாகனங்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 5 Jun 2021 10:57 PM IST (Updated: 5 Jun 2021 10:57 PM IST)
t-max-icont-min-icon

நெகமம் பகுதியில் ஊரடங்கை மீறிய 150 பேரின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

நெகமம்

கொரோனா பரவலை கட்டுப்படுத்த தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கை தமிழக அரசு அமல்படுத்தி உள்ளது. இந்த நிலையில்  ஊரடங்கு விதிகளை மீறி தேவையின்றி வெளியே சுற்றுபவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். 

இதன்படி, நெகமம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெற்றிவேல்ராஜன், சப்-இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் மற்றும் போலீசார் நெகமம் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

 இதுவரை நெகமம் பகுதியில் ஊரடங்கு விதிகளை மீறி தேவையில்லாமல் வெளியே சுற்றியதாக 145 பேரிடம் இருந்து இருசக்கர வாகனமும், 5 பேரிடம் நான்கு சக்கர வாகனமும் என மொத்தம் 150 பேரிடம் வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். 

இதுகுறித்து போலீசார் கூறும்போது, கொரோனாவிடம் இருந்து பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கவே ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் சிலர் தேவையின்றி சாலையில் சுற்றி வருகிறார்கள். 

எனவே நெகமம் பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறோம். ஊரடங்கு விதிகளை மீறி யாரும் வெளியே சுற்றினால் அவர்களின் வாகனங்களை பறிமுதல் செய்து, அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

Next Story